Tamil Cinema News | சினிமா செய்திகள்
கமல் மற்றும் விக்ரம் இணையும் படத்தின் நடிகை,இயக்குனர் அதிகாரபூர்வ அறிவிப்பு.! குஷியில் ரசிகர்கள்.!
நடிகர் கமல்ஹாசனை உலக நாயகன் என்று அழைப்பார்கள் ஏன் என்றால் அவர் ஒவ்வொரு படத்திலும் ஒரு புதிய முயற்ச்சியை கடைபிடிப்பார் அதனால் அவரை உலக நாயகன் என்று அழைக்கிறார்கள்.
கமல்ஹாசனை தமிழ் சினிமா மட்டும் இல்லாமல் உலகமே கொண்டாடுவார்கள் இவர் நடிப்பில் இந்த வருடம் விஸ்வரூபம்2 திரைக்கு வர இருக்கிறது,இந்த படத்தின் இறுதிகட்ட படபிடிப்பு நடந்து கொண்டிருகிறது.
விஸ்வரூபம் முதல் பாகம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது அனைவருக்கும் தெரியும் அதேபோல் விஸ்வரூபம்2 படமும் சர்ச்சையை சந்திக்குமோ என தெரியவில்லை.இதை படம் திரைக்கு வரும் பொழுது பார்க்கலாம்.
இந்த நிலையில் நடிகர் கமல் தயாரிப்பில் விக்ரம் நடிக்கபோவதாக செய்திகள் சமீபத்தில் வந்தன ஆனால் அதிகாரபூர்வ அறிவிப்பு வரவில்லை ஆனால் தற்பொழுது அதிகாரபூர்வ அறிவிப்பை அறிவித்துள்ளார் கமல்.
இந்த படத்தில் விக்ரமுடன் கமல்ஹாசன் பொண்ணு அக்ஷரா ஹாசன் நடிக்க இருக்கிறார் மேலும் தூங்காவனம் இயக்குனர் ராஜேஷ் படத்தை இயக்க இருக்கிறார்.
இருவரும் வித்யாசமான கதைகளை தேர்வு செய்து நடிப்பவர்கள் அதனால் இந்த படம் ஒரு புதுவிதமான கதை இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.
திரு.விக்ரம், செல்வி.அக்ஷரா ஹாசன், இயக்குநர் ராஜேஷ் M செல்வா மற்றும் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனலுடன் இணையும் ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்திற்கும் வாழ்த்துக்கள். புதிதாய்த் துவங்கவிருக்கும் நம் திரைப்படம் வெற்றிகாண விழைவோம்.
திரு.விக்ரம், செல்வி.அக்ஷரா ஹாசன், இயக்குநர் ராஜேஷ் M செல்வா மற்றும் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனலுடன் இணையும் ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்திற்கும் வாழ்த்துக்கள். புதிதாய்த் துவங்கவிருக்கும் நம் திரைப்படம் வெற்றிகாண விழைவோம்.
— Kamal Haasan (@ikamalhaasan) January 20, 2018
