யாருக்கு வேணும் உப்புச்சப்பில்லாத அந்த அவார்டு.. கடும் கோபத்தில் சிவாஜியை தடுத்த கமல்

நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு இணையான நடிகரை தற்போது வரை தமிழ் சினிமா பார்த்ததில்லை. எப்பேர்பட்ட கதாபாத்திரம் கொடுத்தாலும் அதோடு ஒன்றிப்போய் கனக்கச்சிதமாக நடிக்க கூடியவர். இது போன்ற நடிகருக்கு தேவர் மகன் படத்திற்கு முன்பு வரை தேசிய விருது கிடைக்கவில்லை.

சிவாஜி கணேசனும், கமலும் இணைந்து தேவர் மகன் படத்தில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு கமல் தான் திரைக்கதை எழுதியிருந்தார். அதுமட்டுமின்றி தேவர்மகன் படத்தை கமல் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்திருந்தார்.

Also Read :பாரதிராஜா சிவாஜியை வைத்து செதுக்கிய 3 படங்கள்.. கண்ணீர் விட்டுக் கதறிய தாய்மார்கள்

தேவர் மகன் படத்தில் கௌதமி, ரேவதி, நாசர் என பல முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படத்தில் பெரிய தேவராக சிவாஜியும், அவரது மகன் சக்திவேலாக கமலும் நடித்திருந்தார். இப்படம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தினாலும் தற்போது தமிழ் சினிமாவில் ஒரு மைல் கல்லாக தேவர் மகன் படம் அமைந்துள்ளது.

இந்நிலையில் இந்த படம் வெளியான போது சிவாஜி கணேசனுக்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது. இந்த விருது விழாவுக்கு போவதற்காக சிவாஜி உடையெல்லாம் தயார் செய்ய சொல்லி விட்டார்.

Also Read : சிவாஜி படங்களில் A சர்டிபிகேட் வாங்கிய ஒரே படம்.. முகம் சுளிக்க வைத்த காட்சிகள்

ஆனால் சிறந்த துணை நடிகருக்கான விருதை சிவாஜி ஏற்கக் கூடாது, அவருடைய தகுதிக்கு இது ஏற்றதில்லை என போராடி நிராகரிக்க வைத்துள்ளார் கமலஹாசன். யாருக்கு வேணும் இந்த உப்பு சப்பில்லாத விருது என கமல் ஆவேசம் அடைந்துள்ளார்.

மேலும் சிவாஜிக்கு விரைவில் தாதா சாகிப் பால்கே விருது கிடைக்கும், அதுவரை நாம் காத்திருப்போம் என கமலஹாசன் கூறியுள்ளார். அதேபோல் 1996 ஆம் ஆண்டு கமலஹாசன் வாக்கு பலித்தது போல் சிவாஜி கணேசனுக்கு தாதா சாகே பால்கே விருது கொடுத்து கௌரவிக்கப்பட்டது.

Also Read :ஒரே மேடையில் மல்லுக்கட்ட போகும் ரஜினி, கமல்.. எதிர்பார்ப்பை எகிற வைத்த மணிரத்தினம்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்