சினிமாவை ஆட்சி செய்யும் ஓடிடி தளங்கள்.. அன்றே கணித்த உலக நாயகனின் வியூகம்

கொரோனா காலகட்டத்தில் நாம் மட்டும் வீட்டிலேயே முடங்கி கிடைக்கவில்லை. சினிமாவும் தான் அப்போது மிகப்பெரிய அடி வாங்கியது. படப்பிடிப்பு நடத்த முடியாமல் ஒரு பக்கம் அவதிப்பட, மறுபுறம் எடுத்த படங்களை வெளியிட முடியாமல் தயாரிப்பாளர்களும் கஷ்டத்தை சந்தித்து வந்தனர்.

அப்போது தான் ஓடிடி நிறுவனங்கள் தலை தூக்கியது. பெரும்பாலும் தயாரிப்பாளர்கள் தங்களது படங்களை ஓடிடியில் வெளியிட மும்மரம் காட்டி வந்தனர். நாளடைவில் இது எதுவாக இருக்க ஓடிடி தளங்களுக்காகவே படங்களை தயாரிக்கவும் செய்கிறார்கள். மேலும் திரையரங்குகளில் வெளியான பிறகு பெரிய நடிகர்களின் படங்கள் ஓடிடியிலும் வெளியாகி வருகிறது.

Also Read : இறுதி அஞ்சலி செலுத்த வராத கமல்.. கிளம்பிய எதிர்ப்பு, உண்மையான நண்பனாக செய்த கடைசி மரியாதை

இந்நிலையில் சமீபத்தில் அபுதாபியில் நடந்த சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் கமல் கலந்து கொண்டார். இந்நிகழ்வில் வாழ்நாள் சாதனையாளர் என்ற விருது இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமானால் கமலுக்கு வழங்கப்பட்டது. குழந்தை நட்சத்திரமாகவே சினிமாவில் அறிமுகமாகி தனது பங்களிப்பை தற்போது வரை கமல் கொடுத்து வருகிறார்.

அதுமட்டுமின்றி தமிழ் சினிமாவில் பல புதிய தொழில்நுட்பத்தை கொண்டு வந்த வரும் கமல் தான். இதனால் பத்திரிக்கையாளர்கள் ஓடிடி நிறுவனங்கள் பற்றி அவரிடம் கேட்டிருந்தனர். இந்நிறுவனங்கள் பற்றி உலக நாயகன் அன்றே வியூகம் செய்து வைத்துள்ளார். அதாவது ஓடிடியின் புரட்சி எல்லோருக்கும் முன்பாக நான் அறிந்தேன்.

Also Read : அந்த நடிகைக்காக தலைகீழாக நிற்கும் சிம்பு.. ஹீரோயின் தேடும் படலத்தில் இறங்கிய கமல்

ஆனால் அப்போது நான் சொன்னதை யாரும் கேட்கவில்லை. இப்போது அதை கண்முன்னே எல்லாரும் பார்க்க முடிகிறது. சினிமாவில் வரும் மாற்றங்களை ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும். மேலும் சினிமா ரசிகனாக என்னால் பார்க்க விரும்பும் படங்களை நான் எடுக்க முயற்சிக்கிறேன். சில சமயங்களில் நானே அதில் நடிக்கிறேன். ஆனால் இப்போது அவற்றில் நடிப்பதை காட்டிலும் தயாரிப்பில் ஆர்வமாக இருக்கிறேன்.

மேலும் நான் விரும்பும் படங்களுக்கு பணம் செலவு செய்து வருகிறேன் என்று கமல் கூறியுள்ளார். இந்நிலையில் தற்போது ஷங்கர் இயக்கத்தில் கமல் இந்தியன் 2 படப்பிடிப்பில் கலந்துகொண்டு வருகிறார். இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸாக உள்ளது. இதைத்தொடர்ந்து எச் வினோத் இயக்கத்தில் கமல் நடிப்பார் என எதிர்பார்க்கலாம்.

Also Read : வரலாற்றுப் படத்தை மிஞ்சும் அளவிற்கு எஸ் டி ஆரின் 48 வது படம்.. 100 கோடி பட்ஜெட்டுடன் களமிறங்கிய கமல்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்