kamal-birthday-party

தந்தி தொலைக்கட்சியில் கேள்விக்கு என்ன பதில் நிகழ்ச்சியில் திரு. கமல்ஹாசன் அவர்களை பாண்டே அவர்கள் பேட்டி எடுத்தார்.

அதில் அவர் கேட்ட சுவாரஸ்யமான சிக்கலான கேள்விகளுக்கு கமல் அவர்கள் சில தைரியமான பதில்களையும், குழப்பமான பதில்களையும், மழுப்பலான பதில்களையும், அறிவுப்பூர்வமான பதில்களையும் அளித்தார்.

முடிஞ்சா நடிச்சுப்பாரு நாங்க உன்னை நடிக்க விடமாட்டோம்னு சொன்னாங்க, இதுவே ஒரு நடிகனுக்கு மரணம்தானே, அந்த மரணத்தை நான் கடந்துதானே வந்தேன்
அரசியல்வாதிகளோ, பெரும்பணக்காரர்களோ தும்மினால் காணாமல் போகும் எனது தயாரிப்பு நிறுவனம், அதை செயல்பட விடாமல் என்னென்ன சீண்டினார்கள் என்பது உங்கள் எல்லோருக்கும் தெரியும்

kamal
நான் கருப்பு பணத்தை தியாகம் செய்யாமல் இருந்திருந்தால் எனது சொத்து இப்போது இரண்டு மடங்காக இருந்திருக்கும். சினிமாவில் நான் நேர்மையாக இருக்க வேண்டும் என்பதற்காக கறுப்புப் பணத்தை முன்பே உதறினேன்.
என்னை ஜெயலலிதா இருந்தபோது குரல் கொடுக்காதவன் என்று சொல்கிறார்கள், ஒரு அரசிற்கு எதிராக வழக்கு பதிவு செய்யும் தைரியம் யாருக்கு இங்கிருக்கிறது? அன்றே அதை தைரியமாக செய்தவன் நான்.


ஜெயலலிதா என் படப்பிரச்சனையை தீர்க்க வேண்டுமென்றால் வெளிநாட்டிற்கு வந்து அவரை நேரில் பார்க்க சொன்னார். வர முடியாது என்று தைரியமாக அப்போதே மறுத்தேன்.
ஜெயலலிதாவை சந்திக்கும் முன் அவர் வந்தவுடன் அவர் காலில் விழ வேண்டும் என்று எனக்கு கட்டளையிட்டனர். அது யாராக இருந்தாலும் சரி என் சுய மரியாதையை நசுக்கும் ஒருவர் காலில் விழ மாட்டேன் என்று சொன்னேன்.
விஸ்வரூபம் பட வெளியீட்டு பிரச்சனை போது இசுலாமியர்கள் படத்தினை எதிர்த்து குண்டு வைத்தாக சொன்னார்கள். எனக்கு அவர்கள் மீது நம்பிக்கை உள்ளது, அவர்கள் இப்படி செய்ய வாய்ப்பில்லை. அப்படி குண்டு வெடித்திருந்தால் அதை வைத்தது யார் என்று என்னால் யூகிக்க முடியும், ஆனால் அதை வெளியில் சொன்னால் என்னை கைது செய்ய சொல்வார்கள்.

kamal rajini_cinemapettai
கலைஞர் என்பவர் எனக்கு திரைத்துறை சார்ந்தும், தமிழ் சார்ந்தும்
முதன்மையானவர், ஆனால் அரசியல் என்று வரும்போது அவரது கட்சி எனக்கு மூன்றாம்பட்சமே
என்னை அரசியலுக்கு வரும்படி 1983லேயே கலைஞர் அழைத்தார், நான் வர விருப்பமில்லை என்று சொல்லிவிட்டேன், பெரியவரும்(MGR) என்னை அழைத்ததுண்டு அவரிடமும் பணிவாக மறுத்துவிட்டேன்.
ஜெயலலிதா இறந்ததனால் அவர் செய்த குற்றம் சரியாகிவிடுமா? அவரை மன்னித்துவிடலாமா? அப்படியென்றால் ஹிட்லரையும் மன்னிப்பீர்களா? என்னால் மன்னிக்க முடியாது.

Kamal-Rajini-Nadigarsangam
TN Govtதி.மு.கவுடன் FEFSI போராட்டத்தின் போதே எனக்கு முரண்பாடு இருந்திருக்கிறது. ஐம்பது ஆண்டுகளாக தி.மு.க வும் திரைத்துறைக்கு ஒன்றும் செய்ததில்லை.
என் துறையில் நான் நேர்மையானவன் என்று என்னால் நெஞ்சு நிமிர்த்தி சொல்ல முடியும், அது போல் அரசியலில் ஒரே ஒரு ஆளை வர சொல்லுங்கள் பாப்போம். இந்தியாவிலேயே அதுபோல் ஒரு ஆள் இல்லை.
ஜெயலலிதா என்றுமே கலைஞர், MGRக்கு இணையானவர் அல்ல.
என்னை சீண்டிய அம்மையாருக்கு நன்றி சொல்ல கடமைபட்டுள்ளேன். இல்லையேல் நானும் அமைதியாக நாட்டினை பற்றி அக்கறை இன்றி சினிமாவில் மட்டும் பயணித்திருப்பேன்.

Kamalhaasan
என்னை கட்சி ஆரம்பிக்க வைச்சுராதிங்க, 30 வருடங்களுக்கு முன்பே எங்கள் நற்பணி மன்றத்தில் சிறந்த வாக்குறுதிகளை திட்டமிட்டிருக்கிறோம்.
நான் அரசியலுக்கு வரமாட்டேன் என்று நினைத்துக் கொள்ளாதீர்கள்.இது எனது வருங்கால முடிவிற்கான ஆரம்பம்.
அதிமுக தன்னால் அழியும் அதற்கு எதிரிகள் தேவையில்லை.
அ.தி.மு.க விற்கு மாற்று தி.மு.க இல்லை
ரஜினி கட்சி ஆரம்பிப்பதை பற்றி தொலைகாட்சியில் பேசமாட்டேன், ரஜினியிடம் நேரடியாக பேசுவேன்
சாத்தியம் என்பது சொல் அல்ல செயல்

சினிமா பேட்டை கமெண்ட்ஸ்: கடைசி வரை வருவேன், மாட்டேன்னு சொல்லாமல் ரஜினி மாதிரியே இழுத்தடிக்கிறாரே.