“இந்த பவளவிழாவில் கலந்து கொள்வதற்கு நான் மிகவும் பெருமைபடுகிறேன். சிறு வயது முதலே நான் தமிழை கற்றுக்கொண்டது கலைஞரிடம்தான்” என்றார்.

மேலும் “ரஜினி எங்கு அமர்வார்? நான் எங்கு அமர்வேன்? என்று ஸ்டாலினிடம் கேட்டேன், அதற்கு ஸ்டாலின் அவர் கீழே அமர்வார், நீங்கள் மேலே அமர்வீர்கள் அவர் மேடையில் பேசபோவதில்லை என்றார். இதனை கேட்டு நானும் ரஜினியுடன் கைகோர்த்து கீழே அமர்ந்துவிடுகிறேன் எந்த பிரச்சனையும் வராது என்று யோசித்தேன், பிறகுதான் இது பொன்னான வாய்ப்பு தற்காப்பிற்காக தன்மானத்தை இழக்க கூடாது என்று முடிவு செய்தேன்.

அன்று கலைஞர் கட்சியில் சேர அழைத்த போது அதற்கு பதில் சொல்ல தைரியமில்லை, அதை வெளியில் சொல்லக் கூட தைரியமில்லை எனக்கு. அதை புரிந்துகொண்ட கலைஞரும் என்னை வற்புறுத்தவில்லை, அந்த நாகரிகம் இங்கும் (ஸ்டாலினிடமும்) கிடைக்கும் என்று நம்புகிறேன்.

இங்கு அரசியல் கருத்து சொல்ல இது அரசியல் மேடையல்ல என்றாலும் திராவிடம் என்னும் சொல் மக்கள் மனதிலிருந்து என்றுமே நீங்காது. திராவிடம் என்பது வெறும் தமிழகம், தென் இந்தியா என்று நினைத்துக்கொள்ளவேண்டாம். திராவிடம் என்பது ஒட்டு மொத்த இந்தியாவையும் தழுவியது. “திராவிடம் என்னும் சொல் நம் தேசிய கீதத்தில் உள்ளவரை திராவிடத்தை நம் மனதிலிருந்து யாராலும் அழிக்க முடியாது, அது என்றும் நீங்காது நம்முடன் இருக்கும்” என்றார்

kamal

நம் தமிழ் தாய் வாழ்த்தில் இருந்த திராவிடம் என்னும் சொல்லை நீக்க வேண்டும் என்று சீமான் முன்பு சொல்லியது குறிப்பிடத்தக்கது. திராவிடம் என்பதே பொய் தமிழனை முட்டாளாக்க கட்சிகள் செய்யும் மந்திர சொல்தான் திராவிடம் என்னும் சீமானின் கருத்துக்கு முரணாய் அமைந்தது இன்றைய கமலின் பேச்சு.

சினிமா கமெண்ட்ஸ்: எல்லாம் சரி திராவிடம்னா என்ன?