கமலஹாசனுக்கு தற்போது வரை தூணாக நின்ற 3 நண்பர்கள்.. எதற்காகவும் விட்டுக் கொடுத்தது இல்லையாம்

உலகநாயகன் கமலஹாசன் சினிமா, அரசியல் என அனைத்திலும் தன்னை அர்ப்பணித்த வருகிறார். அதேபோல் கமலஹாசன் நட்புக்கும் மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பார். அவருடைய ஆரம்பகால நண்பர்களுக்கு தற்போதுவரை உதவி செய்து வருகிறார். அவ்வாறு எதற்காகவும் விட்டுக் கொடுக்காத கமலஹாசனின் மூன்று நண்பர்களை பார்க்கலாம்.

சந்தான பாரதி : தமிழ் சினிமாவில் இயக்குனர் மற்றும் நடிகர் சந்தானபாரதி. இவரும், உலகநாயகன் கமலஹாசன் இருவரும் பள்ளிப்படிப்பு முதலில் நண்பர்கள். கமலஹாசனின் திருமண பிரிவிற்குப் பிறகு அவருக்கு உறுதுணையாக இருந்தவர் சந்தான பாரதி.

இவர்கள் இருவரும் பல படங்களில் இணைந்து பணியாற்றி உள்ளனர். சமீபத்தில் விக்ரம் படத்தின் படப்பிடிப்பும் போது லோகேஷ் கனகராஜ், கமலஹாசன், சந்தானபாரதி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆனது.

நாசர் : தமிழ் சினிமாவில் வில்லன் கதாபாத்திரம் மூலம் மக்கள் மனதை கவர்ந்தவர் நாசர். ஆரம்பத்தில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த நாசர் கமல்ஹாசனின் நாயகன் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். அந்தப்படத்தில் நாசர் நடிக்க முடியாமல் தடுமாறியபோது கமலஹாசன் தைரியம் கொடுத்துள்ளார்.

இதிலிருந்து இவர்கள் நட்பு தொடர கமலஹாசன் தயாரிப்பில் உருவான மகளிர் மட்டும் படத்தில் நாசர் ஹீரோவாக நடித்தார். அதன் பிறகு தேவர் மகன், உத்தம வில்லன் போன்ற பல படங்களில் நாசர் மற்றும் கமலஹாசன் இணைந்து நடித்துள்ளனர்.

ரமேஷ் அரவிந்த் : தமிழ் சினிமாவில் இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் என பல பரிமாணங்களைக் கொண்டவர் ரமேஷ் அரவிந்த். இவர் கமலஹாசனுடன் இணைந்து சதி லீலாவதி, பஞ்ச தந்திரம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். கமலஹாசனின் நீண்டகால நண்பரான ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் உத்தம வில்லன் படத்தில் கமலஹாசன் நடித்து இருந்தார். இப்படத்தின் கதையை கமலஹாசன் எழுதி இருந்தார். ரமேஷ் அரவிந்த் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட போது கமலஹாசன் இவருக்கு சிகிச்சை அளித்தார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்