திங்கட்கிழமை, டிசம்பர் 9, 2024

விண்வெளி நாயகா விடியல் நீதான்.. ரிலீஸ் தேதியோடு வெளிவந்த தக் லைஃப் மிரட்டல் டீசர்

Thug Life Teaser: உலக நாயகன் கமல்ஹாசன் இன்று தன்னுடைய 70வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரையுலக பிரபலங்கள் அரசியல் புள்ளிகள் உட்பட ரசிகர்களும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அதேபோல் மணிரத்னம் இயக்கத்தில் அவர் நடித்து வரும் தக்லைப் பட குழுவும் ஒரு டீசரை வெளியிட்டு உலக நாயகன் பிறந்த நாளை கொண்டாடி வருகின்றனர். அதில் படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டிருப்பது கூடுதல் சிறப்பாக இருக்கிறது.

அதன்படி ஏ ஆர் ரகுமான் இசையில் சிம்பு, திரிஷா, அசோக் செல்வன் என ஏராளமான பிரபலங்கள் இதில் நடித்து வருகின்றனர். ஆனால் டீசர் முழுவதும் உலக நாயகனும் சிம்புவும் தான் நிறைந்து இருக்கின்றனர்.

எதிர்பார்ப்பை ஏற்படுத்திய தக்லைப் டீசர்

மிரட்டலான சண்டை காட்சிகளுடன் அற்புதமான பின்னணி இசையையும் சேர்த்து டீசர் வெளியாகி இருக்கிறது. அதில் ரத்தம் தெறிக்க வரும் சிம்புவின் கதாபாத்திரமும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதேபோல் டீசரின் ஆரம்பத்தில் கமல் தாடி நீளமான முடி என வருகிறார். அதுவே இறுதியில் விண்வெளி நாயகா என காட்டப்படும் அவருடைய கெட் அப் வேற லெவலில் இருக்கிறது.

இப்படியாக ரசிகர்களை புல்லரிக்க வைத்துள்ள இந்த டீசர் இறுதியில் படம் அடுத்த வருடம் ஜூன் 5ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்காகவே ரசிகர்கள் இப்போது ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

- Advertisement -

Trending News