kamal-haasan

நடிகர் கமல் ஹாசன் சமீபத்தில் தனது பிறந்த நாளை எப்பொழுதும் போல் சிறப்பில்லாமல்  கொண்டாடினார். ரசிகர்கள், திரையுலகை சேர்ந்தவர்கள் என பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்கள்.

சில நாளாக வீட்டில் ஓய்வெடுத்த படியே பணிகளை கவனிக்கும் அவர் சமீபத்தில் தனக்கு மிகவும் பிரியமான இசை பாடகர் பாலமுரளிகிருஷ்னா இறந்ததற்கு அஞ்சலி செலுத்த வந்தார்.

இந்நிலையில் அவரின் அடுத்த படம் பற்றிய தகவல்வெளிவந்துள்ளது. இப்படத்திற்கு மெய்யப்பன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

கமலின் முதல் படமான களத்தூர் கண்ணம்மாவை தயாரித்த ஏ.வி.எம் நிறுவனம் தயாரிக்க மௌலி இயக்குகிறார். உலக நாயகன் ரசிகர்களுக்கு இது மகிழ்ச்சியான செய்தியே.