தமிழ் சினிமாவில் நடிகர் மற்றும் வில்லன் கதாபத்திரங்களுக்கு எப்போதும் பஞ்சம் ஏற்பட்டதில்லை. ஆனால் தமிழ் சினிமாவில் சமீப காலமாக குணச்சித்திர கதாபாத்திரங்களுக்கு நடிக்கத்தான் ஆட்கள் கிடைப்பது இல்லை.

ஆனால் நடிகர் சௌந்தர்ராஜா ஹீரோ, வில்லன், குணச்சித்திரம் என எல்லா கதாபாத்திரங்களுக்கும் பொருத்தமான தோற்றத்தில் உள்ளார். சமீபத்தில் அவர் நடித்த தர்மதுரை படத்தில் விஜய் சேதுபதிக்கு இணையாக ஆகஷன் காட்சிகளில் டூப் இல்லாமல் நடித்து அனைவரின் பாராட்டுகளை பெற்றார்.

தற்போது அவர் நடித்து வரும் ஒரு கனவு போல, தங்கரதம் ஆகிய படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து தனது திறமையை நிரூபித்துள்ளார்.

சௌந்தர்ராஜா கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகர் கமலை சந்தித்துள்ளார். கமல் செளந்தர் நடிக்கும் படங்களை பற்றி கேட்ட போது ஒரு சில படங்களில் மட்டும் தான் நடிக்கிறேன் வாய்ப்பு கொடுத்தால் உங்கள் படத்திலும் நடிக்கிறேன் என விளையாட்டாக கூறியுள்ளார்.

அதை கேட்ட கமல் சமயம் வரும் போது அழைப்பதாக சிரித்துக்கொண்டே பதில் தெரிவித்துள்ளார். இதனால்  சௌந்தர்ராஜா உற்சாகமாக உள்ளார்