Tamil Cinema News | சினிமா செய்திகள்
கடவுள் இல்லைன்னு சொல்லல இருந்தா நல்லா இருக்கும்னு சொல்றேன்.. சரி சரி இந்தியன் 2 பூஜைக்கு வந்து சேருங்க
எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் என்ற விவேக் காமெடி நியாபகம் இருக்கிறதா. அந்த காமெடி தான் தற்போது கமல் வாழ்க்கையில் நடந்துள்ளது. கமல் நாத்திகவாதி என்பது அனைவரும் அறிந்ததே.
அவரின் ஃபேவரைட் டயலாக்குகளில் ஒன்றான கடவுள் இல்லைன்னு சொல்லல, இருந்தா நல்லா இருக்கும்னு சொல்ல என்பதுதான். அப்படி இருக்கும் கமல் படத்திற்கே தற்போது சாங்கியம் பார்த்து பூஜை போட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
இந்தியன்-2 என்ற ஒற்றை படத்தால் பல தடங்கல்கள் ஏற்பட்டு லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனமே ஆட்டம் கண்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் படப்பிடிப்பில் கிரேன் கழண்டு விழுந்து 3 பேர் இறந்த சம்பவம் கூட நடைபெற்றது.
இதனால் உடனடியாக இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தை மாற்றி உள்ளாராம் சங்கர். ஊரடங்கு தளர்த்தப் பட்ட பின்பு உடனடியாக படப்பிடிப்பைத் தொடங்க முடிவு எடுத்துள்ள இந்தியன் 2 படக்குழு அதற்கான வேலைகளில் இறங்கியுள்ளது.
பின்னி மில்லுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் செய்திகள் கிடைத்துள்ளது. இந்நிலையில் இந்தியன்-2 படத்திற்கு சில பரிகார பூஜைகள் செய்து ஆரம்பிக்கலாம் என சென்டிமென்ட்டாக லைக்கா நிறுவனம் கருதுகிறதாம்.
இதனால் விரைவில் பூஜை போடப்பட்டு படப்பிடிப்பு தொடங்க உள்ளது. அந்த பூஜையில் கமல்தான் முக்கிய ஆளாக கலந்து கொள்ள இருக்கிறாராம்.
