கமல்ஹாசன் சபாஷ் நாயுடு என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்த படத்துக்கு ஆரம்பத்திலேயே ஒரு சிக்கல் வந்துள்ளது.

அருந்ததியர் முன்னேற்ற பேரவை பொதுச்செயலாளர் ப.இளங்கோவன் கோவை மாவட்ட கலெக்டரிடம் ஒரு கோரிக்கை மனு அளித்தார்.

அந்த மனுவில், நடிகர் கமல்ஹாசன் நடித்து வரும் திரைப்படத்துக்கு சபாஷ் நாயுடு என்று பெயரிட்டு விளம்பரங்கள் செய்து வருகின்றனர். இந்த தலைப்பு சமூக அமைதியை சீர்குலைக்கும் விதத்தில் அமைந்துள்ளது.

அதிகம் படித்தவை:  ரஜினி,கமல் படங்களை தொடர்ந்து விஜய் படத்தை குறிவைக்கும் தயாரிப்பாளர்

இந்த படத்தை வெளியிட அனுமதி அளித்தால் சாதி பெயரில் படத்தலைப்புகளை கொச்சையாக அமைத்து திரைப்படங்களை உருவாக்கும் தவறான செயலுக்கு முன்னுதாரணமாக அமையும்.

அதிகம் படித்தவை:  தி.மு.க தலைவரை சந்தித்த நடிகர் கமல்ஹாசன் இதோ புகைபடங்கள்.!

ஆகவே இந்த படத்தின் தலைப்பை மாற்றும் வரையில், இந்த படத்தின் விளம்பரங்களோ அல்லது இந்த திரைப்படமோ வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது