கமல் மோகன்லால் கூட்டணியில் 2009ம் ஆண்டு வெளிவந்து பெருவெற்றி பெற்ற திரைப்படம் உன்னை போல் ஒருவன். இப்படத்தில் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல என்று போட்டி போட்டுக்கொண்டு இருவரும் நடித்திருந்தனர்.

அதன் பிறகு மோகன்லால் நடித்த திருஷ்யம் என்ற மலையாளப் படத்தின் ரீமேக்கான பாபநாசம் படத்தில் கமல் நடித்திருந்தார். இதில் மலையாள வெர்சனில் கமல் படங்களை மோகன்லால் பார்ப்பது போன்றும் தமிழ் வெர்ஷனில் மோகன்லால் படங்களை கமல் பார்ப்பது போன்றும் காட்சிகள் அமைக்கப்படிருந்தன. இந்த படங்களின் ஒப்பீடும் ரசிகர்களுக்கு பெரும் சவாலாக அமைந்தது.

அதிகம் படித்தவை:  அஜித்தும் கமலின் வாரிசுகளும், உலக சாதனை செய்தது எனது முதல் படம்..! கமல் மகள் பெருமிதம்

drishyam-papanasamஇவ்வாறு சம அளவு திறமை கொண்ட இருவரும் இப்போது மீண்டும் இணைவதாக செய்தி வெளிவந்துள்ளது. Oh My God என்ற படத்தோட தமிழ் மற்றும் மலையாள ரீமேக்கில்தான் மோகன்லாலும் கமலும் இணைந்து நடிக்கப்போவதாக சொல்கிறார்கள்.

ஆனால் 2012ம் ஆண்டு அக்க்ஷை குமார் எழுதி நடித்திருந்த படம் பெயரும் Oh My God, இதே போல் 2008ம் ஆண்டு வினய் பதக் நடித்த படத்தின் பெயரும் oh, my god. இந்த இரண்டு படங்களில் எந்த படத்தின் ரீமேக்கில் இவர்கள் நடிக்க உள்ளார்கள் என்ற சந்தேகம் இப்போது எழுந்துள்ளது.

அதிகம் படித்தவை:  மீண்டும் வந்துவிட்டார் பல்ராம் நாய்டு- கமலின் அடுத்த பட முழு தகவல்

சினிமா பேட்டை கமெண்ட்ஸ்: ரெண்டு படமுமே கடவுள் நேரில் வருவது போன்ற படங்கள்தான். அதனால் கமல் மீது சர்ச்சையை கிளப்ப இப்பொழுதே சங்கங்களும், கட்சிகளும் தயாராகிக்கொள்ளுங்கள்.