இந்திராகாந்தி, ஜெயலலிதா எல்லாம் நம்ம தோஸ்த் தான்.. J.பேபிம்மா நடிப்பை பார்த்து கமல் கூறிய அந்த ஒரு வார்த்தை

Actor Kamal: கமலுக்கு நடிப்பின் மீது தீராத காதல் என்று சொல்வதை விட வெறி என்று சொல்வது பொருத்தமாக இருக்கும். அப்படிப்பட்டவரே வியந்து பார்க்கும் அளவுக்கு ஒரு நடிகையும் இருக்கிறார்.

அப்படி ஆண்டவருக்கு பிடித்த நடிகைகளில் ஊர்வசியும் ஒருவர். ஹீரோயினாக நடிக்கும் போதே அதில் நகைச்சுவையை புகுத்தி நம்மை ரசிக்க வைத்த பெருமையும் இவருக்கு உண்டு.

இப்போது அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வரும் இவர் சவாலான கேரக்டர்களை தான் மிகவும் விரும்புகிறார். அப்படி சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த J.பேபி நல்ல விமர்சனங்களை பெற்றது.

அந்த படத்தில் அவர் வயது மூப்பு காரணமாக செய்யும் சில விஷயங்கள் வினையாக முடிந்து விடும். இதனால் பிள்ளைகளின் வெறுப்புக்கு ஆளாகும் இவர் பல பிரச்சினைகளை சந்திப்பார்.

ஊர்வசியை பாராட்டிய கமல்

அந்த கேரக்டரில் ஊர்வசியின் நடிப்பு வியக்கும் வகையில் இருந்தது. அதேபோல் இப்படி ஒரு நடிகை தமிழ் சினிமாவுக்கு கிடைத்தது பெருமை என்பதையும் மறுக்க முடியாது.

அந்த அளவுக்கு ஒவ்வொரு காட்சியிலும் இவர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். அதிலும் பிரச்சனை செய்யும் போதெல்லாம் நான் இந்திரா காந்தி ஃப்ரெண்ட். எனக்கு ஸ்டாலினை தெரியும். ஜெயலலிதா என்னோட தோஸ்த் என கூறுவார்.

இப்படி அழுத்தமான கேரக்டரில் நடித்திருக்கும் ஊர்வசியின் நடிப்பு கமலையும் வியக்க வைத்திருக்கிறது. படத்தை பார்த்து கண்கலங்கிட்டேன் என்று கூட அவர் பாராட்டி இருக்கிறார்.

எப்போதுமே ஊர்வசியின் நலம் விரும்பியாக இருக்கும் ஆண்டவர் அவருக்கு பல ஆலோசனைகளை கூறுவாராம். அதேபோல் இவர் எந்த படத்தில் நடித்தாலும் பாராட்டி தள்ளிவிடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →