India | இந்தியா
புதுவிதமான வேண்டுகோளை மக்களுக்கு வைத்த கமல்.. நெகிழ வைத்த தருணம்!
தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் 4 என்ற ரியாலிட்டி ஷோவை உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிக் கொண்டிருப்பது நாம் அறிந்ததே.
மேலும் கமல் வார இறுதி நாட்களில் பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்களை சந்தித்து, வீட்டில் உள்ள பஞ்சாயத்துகளை மட்டும் பேசாமல் நிகழ்ச்சியோடு ஒத்துப் போகக்கூடிய பல பொதுநல கருத்துக்களையும் கூறுவார்.
அந்த வகையில் நேற்று கமல் வீட்டில் உள்ளவர்கள் கடந்த வாரம் எழுதிய லெட்டர் டாஸ்க்கைப்பற்றி பேசியதோடு, ராணுவ வீரர்களுக்கு லெட்டர் எழுதுமாறு வேண்டுகோள் வைத்தது அனைவரையும் நெகிழ செய்துள்ளது.
அதாவது பிக் பாஸ் நிகழ்ச்சியில், கடந்த வாரம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்களை அவர்கள் மிஸ் செய்யும் நபருக்கு கடிதம் எழுதுமாறு டாஸ்க்கை கொடுத்திருந்தார் பிக்பாஸ் .
மேலும் நேற்றைய எபிசோடில் பேசிய கமல் அவர்களுடைய லெட்டர் பற்றி எல்லாம் கேட்டு விட்டு இறுதியாக ராணுவ வீரர்களுக்கு நீங்கள் அனைவரும் லெட்டர் எழுத வேண்டும் என்று போட்டியாளர்களிடம் கூறினார்.
அதுமட்டுமில்லாமல் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருக்கும் அனைவரையும் ராணுவ வீரர்களுக்காக நியூ இயர் தினத்தன்று லெட்டர் எழுதி அனுப்பி வைக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.
இதனைத் தொடர்ந்து பேசிய கமல், ‘40 நாள் பிரிஞ்சு இருக்க உங்களுக்கே இப்படி இருந்துச்சுனா.. ராணுவ வீரர்கள் எல்லாம் எவ்வளவு நாள் அவங்க சொந்தங்கள விட்டு நமக்காக அங்க கஷ்டபடுறாங்க.. அதனால நீங்க அவங்களை நினைச்சு நியூ இயர் அப்போ கண்டிப்பா லெட்டர் எழுத ட்ரை பண்ணுங்க’ என்று கூறியிருந்தார்.

kamal-bigg-boss-4
எனவே, கமல் இவ்வாறு பேசியதைப் பார்த்த பிக் பாஸ் ரசிகர்கள் பலர், ராணுவ வீரர்களை நினைத்து நெகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
