ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

கரெக்டா வந்த பங்கு.. நேர்மையை பார்த்து மெய்சிலிர்த்து கமல் போட்ட மாஸ்டர் பிளான்

கமலஹாசனுக்கு விக்ரம் படம் கொடுத்த மாபெரும் வெற்றியால் தற்போது தொடர்ந்து சினிமா மீது ஆர்வத்தை காட்டி வருகிறார். மேலும் தான் சினிமாவில் எடுத்த காசை சினிமாவில் தான் போடுவேன் என்று பலமுறை கமல் கூறியுள்ளார். அதனால் தற்போது தயாரிப்பிலும் கமல்ஹாசன் மும்முரம் காட்டி வருகிறார்.

இந்நிலையில் வசூல் மன்னன் சிவகார்த்திகேயனின் படத்தை கமல் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் மூலம் தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அதன் பின்பு தளபதி விஜய்யின் படத்தை தயாரிக்க கமல் ஆர்வம் காட்டி வருகிறார். தளபதி 67 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.

இதனால் தளபதி 67 அல்லது தளபதி 68 படத்தை கமல் தயாரிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது பிரபல நடிகரின் படத்தை தயாரிக்க போவதாக கமல் அறிவித்துள்ளார். சமீபத்தில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் தொடங்கி 15 வருடம் ஆனதை முன்னிட்டு உதயநிதி பிரம்மாண்ட நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார்.

அந்த விழாவில் கலந்துகொண்ட கமலஹாசன் மேடையில் பேசும்போது தன்னுடைய தயாரிப்பு நிறுவனம் சார்பாக உதயநிதியின் படத்தை தயாரிக்க உள்ளதாக கூறியிருந்தார். அதாவது உதயநிதி ரெட் ஜெயன்ட் மூவிஸ் இல் பங்காற்றிய பலரையும் இவ்விழாவுக்கு அழைத்திருந்தார்.

அந்தவகையில் இந்நிறுவனம் வினியோகம் செய்த கமல்ஹாசனின் விக்ரம் படம் நல்ல லாபத்தை பெற்றுத் தந்தது. இதனால் கமலஹாசனுக்கு கொடுக்க வேண்டிய 98 கோடியை பக்கா செட்டில்மெண்ட் ரெட் ஜெயன்ட் மூவிஸ் செய்திருந்தது.

உதயநிதியின் இந்த நேர்மையை பார்த்து மெய்சிலிர்த்து போன கமல்ஹாசன் அவர் படத்தை தயாரிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். எப்படியாக இருந்தாலும் இந்தப் படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் தான் விநியோக செய்யும். அதிலிருந்த தனக்கான பங்கை கரெக்டாக பெற்றுக்கொள்ளலாம் என கமலஹாசன் மாஸ்டர் பிளான் போட்டு உள்ளார்.

- Advertisement -

Trending News