Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஷங்கரை நேக்கா கழட்டிவிட்டு, மாஸ்டர் ப்ளான் போட்ட கமலின் புகைப்படம்.. ரொம்ப தப்புமா!

தேர்தலில் அடைந்த தோல்வியினால் சிறிதும் அஞ்சாமல் அடுத்த கட்டத்தை நெருங்கியுள்ளார் கமலஹாசன். ஷங்கர் இயக்கத்தில் நடித்து வந்த இந்தியன்-2 படம் தயாரிப்பு நிறுவனத்துடன் ஏற்பட்ட பிரச்சனையால் பாதியில் நின்றுள்ளது.
அதற்கு அடுத்தபடியாக கமலஹாசனின் வெறித்தனமான ரசிகரான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் என்ற படத்தில் நடித்து வருகிறார். கமல் அந்த படத்திற்கு முன்னதாக பாபநாசம்-2 படத்தில் நடிப்பதாக செய்திகள் பரவலாக பேசப்பட்டது.
ஆனால் அதெல்லாம் இல்லை விக்ரம் படப்பிடிப்பு விரைவில் தொடங்கி வெளியாகும் என்பது போன்ற புகைப்படம் ஒன்றை லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார். இதில் ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றிய அன்புமணி மற்றும் அறிவுமணி மாஸ்டர்கள் விக்ரம் படத்தில் இணைந்துள்ளனர்.
இவர்கள் மெட்ராஸ், கபாலி, இருமுகன், கேஜிஎப், கைதி போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர்கள். இதை விட சுவாரஸ்யம் என்னவென்றால் தளபதி 65 படத்திலேயும் அன்பு, அறிவு மாஸ்டர்கள் இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

lokesh-kamal-vikram
இதனால் கமல்ஹாசன் நடிக்க உள்ள விக்ரம் படத்தில் விஸ்வரூபம் படத்தை விட பிரமாண்டமான சண்டைக் காட்சிகள் இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இதனால் ஷங்கர் இயக்கத்தில் உருவாக இருந்த இந்தியன்-2 மற்றும் பாபநாசம்-2 ஆகிய இரண்டு படங்களையும் விக்ரம் படத்தை முடித்துவிட்டு தான் நடிப்பார் என்பது உறுதியாகி உள்ளது.
