fbpx
Connect with us

Cinemapettai

லோகேஷ் கனகராஜ்-கமல் படத்தில் வில்லன் இந்த பிரபல நடிகரா? அதிரப் போகும் 2021 சம்மர்!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

லோகேஷ் கனகராஜ்-கமல் படத்தில் வில்லன் இந்த பிரபல நடிகரா? அதிரப் போகும் 2021 சம்மர்!

தமிழ் சினிமாவில் அடுத்தது மிகப் பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் திரைப்படம் கமல்ஹாசன் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணையும் கமல்ஹாசன் 232 படம்தான்.

இந்த படத்திற்கு தற்காலிகமாக எவனென்று நினைத்தாய் என டைட்டில் வைத்துள்ளனர். மேலும் இந்த படத்தை 2021 கோடை விடுமுறையில் வெளியே கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்.

இது ஒருபுறமிருக்க இந்தியன் படத்தை தொடர்ந்து கமல் ஹாசனுக்கு இரண்டாவது முறையாக இசையமைக்க உள்ளார் அனிருத். இந்த படத்தை கமல்ஹாசன் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் மூலம் சொந்தமாக தயாரிக்கவுள்ளார்.

தென்னிந்திய சினிமாவில் லோகேஷ் கனகராஜ் என்ற இயக்குனர் மீது ஒரு பார்வை விழுந்துள்ளது. ஏகப்பட்ட பட வாய்ப்புகள் அவருக்கு குவிந்து கொண்டிருந்த நிலையில் தன்னுடைய குருநாதர் அதற்காக கமல்ஹாசன் பட வாய்ப்பை ஒப்புக் கொண்டுள்ளார்.

மேலும் இந்த படத்தில் சுவாரஸ்யமான நிகழ்வு என்னவென்றால் இந்தியன் படத்தில் கமலுக்கு வில்லனாக நடிக்க முடியாத ஆசையை லோகேஷ் கனகராஜ் படத்தில் நிறைவேற்றவுள்ளார் விஜய் சேதுபதி.

ஆம். விஜய் சேதுபதிதான் கமல்ஹாசன் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணையும் படத்தில் வில்லனாக நடிக்க உள்ளாராம். இதற்கான பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருப்பதாகவும் விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் எனவும் தெரிகிறது.

Continue Reading
To Top