கமல் படத்திலிருந்து ஓட்டம் பிடித்த ராகவா லாரன்ஸ்.. கப்புனு வாய்ப்பை பிடித்த முன்னணி நடிகர்

நடிகராகவும் அரசியல்வாதியாகவும் வலம் வரும் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அடுத்ததாக உருவாக உள்ள திரைப்படம் விக்ரம். அந்த படத்திற்கான ஆரம்பகட்ட வேலைகள் அனைத்தும் முடிந்து படப்பிடிப்பிற்காக வெயிட் செய்து கொண்டிருக்கின்றனர்.

கமலஹாசனின் சினிமாவை பார்த்து வளர்ந்த லோகேஷ் கனகராஜ் தற்போது அவரையே இயக்கும் அளவுக்கு உயர்ந்துள்ளார். இதனால் கமல் மற்றும் விக்ரம் கூட்டணியில் உருவாகும் படத்திற்கு லோகேஷ் கனகராஜுக்கு கமல் நடிப்பில் ரொம்ப பிடித்த படமான விக்ரம் படத்தின் தலைப்பை வைத்து விட்டனர்.

முன்னதாக விக்ரம் படத்தில் மலையாள நடிகர் பகத் பாசில் கமல்ஹாசனுக்கு வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வந்தது. அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவின் டாப் நடிகர் ராகவா லாரன்ஸ் ஒப்பந்தமாகி உள்ளதாகவும் செய்திகள் கிடைத்தது.

தற்போது ராகவா லாரன்ஸ், கமலஹாசன் அரசியலில் நுழைந்துள்ளதால் கண்டிப்பாக சொன்ன தேதியில் விக்ரம் படம் நடைபெறுவதற்கு வாய்ப்பு இல்லை என தன்னுடைய அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்துவதற்காக விலகி விட்டாராம்.

இதன் காரணமாக அந்த பொன்னான வாய்ப்பை லட்டு மாதிரி அள்ளித்தூக்கி விட்டாராம் விஜய் சேதுபதி. ஏற்கனவே ரஜினி மற்றும் விஜய்க்கு வில்லனாக நடித்து தன்னுடைய மார்க்கெட்டை உயர்த்தி ஒரு நாளைக்கு ஒரு கோடி சம்பளம் வாங்கும் அளவுக்கு உயர்ந்து விட்டார்.

தற்போது கமல்ஹாசனையும் பயன்படுத்தி தன்னுடைய சம்பளத்தையும் மார்க்கெட்டையும் உச்சத்திற்கு கொண்டு செல்ல முடிவு செய்து விட்டாராம் விஜய் சேதுபதி. இதனால் மீண்டும் லோகேஷ் இயக்கத்தில் வில்லனாக நடிக்க உள்ளதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஏற்கனவே இரட்டிப்பாகி உள்ளது.

vijaysethupathi-cinemapettai
vijaysethupathi-cinemapettai
Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்