Tamil Cinema News | சினிமா செய்திகள்
வெறித்தனமாக வேட்டையாட களமிறங்கும் கமல்.. மிரட்டும் லோகேஷ் கனகராஜ் பட டைட்டில்!
தமிழ் சினிமாவில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்து கொண்டிருக்கும் படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நாள்தோறும் பெருகி வருகிறது.
இந்த சூழலில் தற்போது இந்த படத்திற்கான டைட்டில் அடங்கிய மிரட்டலான டீசரை சமூக வலைதளங்களில் படக்குழு வெளியிட்டுள்ளது .
மேலும் இதில் கமல் தனது கையில் ரக ரகமான துப்பாக்கிகளை கையில் வைத்து மாஸ் காட்டுகிறார்.
அதுமட்டுமில்லாமல் தலைவாழை இலை போட்டு வெள்ளையும் ஜொள்ளையுமாய் முகமூடி அணிந்திருக்கும் அரசியல் பிரமுகர்களுக்கு விருந்தளித்து, அதன்பின் வேட்டையாடும் வெறித்தனத்தைக் காட்டி உள்ளார் நடிகர் கமல்.
எனவே கமலின் அரசியல் பசிக்கு தீனிபோடும் வகையில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படமானது இருக்கப்போவது தெரிகிறது.
மேலும் லோகேஷ் கனகராஜ்- கமல் கூட்டணியில் உருவாகிவரும் இந்த படத்திற்கு ‘ விக்ரம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

kamal-vikram-cinemapettai
மேலும் தற்போது வெளியாகியுள்ள டைட்டில் அடங்கிய மிரட்டலான டீசரை பார்க்கும் போதே, விக்ரம் படத்திற்கான எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே படக்குழு எகிற வைத்துள்ளது.
