Connect with us
Cinemapettai

Cinemapettai

kamal

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விட்ட குறை தொட்ட குறையா? கமல் கொடுத்த லிப்லாக்.. இப்போது பெரும் சர்ச்சை

என்ன சத்தம் இந்த நேரம் – என்று புன்னகை மன்னன் படத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிகை ரேகாவுக்கு கொடுத்த லிப்லாக் முத்தம் இப்போது சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.

கவிதாலாயா நிறுவனம் சார்பில் கே.பாலசந்தர் தயாரித்து இயக்கிய படம் புன்னகை மன்னன். இதில் கமல்ஹாசன், ரேவதி, ரேகா, டெல்லி கணேஷ், ஶ்ரீவித்யா உட்பட பலர் நடித்திருந்தனர். இளையராஜா இசை அமைத்திருந்தார். இந்தப் படம் 1986 ஆம் ஆண்டு வெளியானது.

இந்த படத்தில் காதலர்களான கமல்ஹாசனும் ரேகாவும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்வர்கள். ஒகேனக்கல். அருவியின் உச்சியில் இருந்து கீழே விழ முடிவு செய்திருப்பார்கள். அதற்கு முன் நடக்கும் காதல் காட்சிகள் என்ன சத்தம் இந்த நேரம் என்ற பாடல் வரும்.

தற்கொலைக்கு முன் சாகப்போகும் தருவாயில் கமல்ஹாசன் ரேகாவுக்கு திடீரென லிப் லாக் முத்தம் கொடுத்திருப்பார். இந்த முத்தம் அந்தக் காட்சிக்கு பொருத்தமாக அமைந்தது. அந்த காலத்தில் அமைந்த முதல் தமிழ் லிப்லாக் படமாக இது பேசப்பட்டது.

பிறகு கீழே விழும் ரேகா, இறந்துவிட, கமல்ஹாசன் மரத்தில் சிக்கிப் பிழைத்து விடுவதுபோல கதை அமைந்திருக்கும். படம் சூப்பர் ஹிட்டானது. படத்தில் இடம்பெற்ற அத்தனை பாடல்களும் சூப்பர். நடிகை ரேகா தனது சினிமா வாழ்க்கை குறித்து கடந்த சில வருடம் முனபு மனம் திறந்தார்.

இந்த முத்தக் காட்சி குறித்து பேசுகையில், அப்போது இயக்குனரோ, கமல்ஹாசனோ எனக்கு முத்தம் கொடுப்பது போல காட்சியை எடுக்கப் போகிறோம் என்று கூறவில்லை. என்னிடம் சொல்லாமல் திடீரெனதான் கமல்ஹாசன் முத்தம் கொடுத்தார் என்று கூறி இருந்தார்.

கமல்ஹாசன் இப்படி சொல்லாமல் முத்தம் கொடுத்தது சரிதானா? என்று பரபரப்பாக விவாதித்து வருகின்றனர். இதுபற்றி நடிகை ரேகா கூறும்போது, அது எப்போதோ நான் கொடுத்தப் பேட்டி. இப்போது அது ஏன் பிரபலமாகி வருகிறது என்று தெரியவில்லை.

என்னிடம் அனுமதி கேட்காமல் எடுக்கப்பட்ட காட்சிதான் அது. அந்தப் படத்துக்காக எடுக்கப்பட்டது. அது படத்துக்கு பயன்பட்டது. அவ்வளவுதான். அதைப் பற்றி இப்போது பேச விரும்பவில்லை என்றார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top