Tamil Cinema News | சினிமா செய்திகள்
22 வருடங்களுக்கு பிறகு கமலஹாசனுடன் இணைந்த பிரபல நடிகர்.. எதிர்பார்ப்பை எகிற வைக்கும் லோகேஷின் விக்ரம்
உலக நாயகன் கமலஹாசனுடன் 22 வருடத்திற்கு பிறகு பிரபல நடிகர் கூட்டணி போட உள்ள செய்தி ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்க எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் லோகேஷ் கனகராஜ் கூட்டணி என்றால் சும்மாவா.
சினிமாவில் தன்னுடைய ஆசான் உலக நாயகன் தான் என்று கூறிக்கொண்டிருந்த லோகேஷ் கனகராஜுக்கு கமல் தன்னுடைய 232வது படமான விக்ரம் படத்தை இயக்கும் வாய்ப்பைக் கொடுத்தார்.
அதை கனகச்சிதமாக பிடித்துக்கொண்டு தற்போது அடுத்தடுத்து விறுவிறுப்பான வேலைகளில் இறங்கியுள்ளார் லோகேஷ் கனகராஜ். சமீபத்தில் கூட விக்ரம் படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி செம வரவேற்பு பெற்றது.

vikram-cinemapettai
அந்த டீசரை ஹாலிவுட் படம் காப்பி என்று பலர் கூறினாலும் இணையத்தில் செம ஹிட்டடித்தது குறிப்பிடத்தக்கது. மேலும் கமல்ஹாசனுக்கு வில்லனாக பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது.
தற்போது கமல்ஹாசனுடன் 1998 ஆம் ஆண்டு வெளியான காதலா காதலா படத்தில் நடித்த பிரபுதேவா மீண்டும் இந்த படத்தில் அவருடன் நடிக்க உள்ளாராம். இந்த செய்தி தான் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
காதலா காதலா படம் முழுக்க முழுக்க காமெடி கலாட்டா நிறைந்த படமாக அமைந்தது. ஆனால் விக்ரம் படம் முழுக்க முழுக்க லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அதிரடி படமாக உருவாக உள்ளது. விக்ரம் படத்தில் காதலா காதலா பட கூட்டணி என்ன செய்யப்போகிறது என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
