Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சிம்புவுடன் இணையும் கமல்.. இப்படி ஓவர் பில்டப் செஞ்சுதான் லைகர், கோப்ரா புசுன்னு போச்சு

கௌதம் வாசுதேவ் மேனன், சிம்பு கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் வெந்து தணிந்தது காடு. ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா மற்றும் அச்சம் என்பது மடமையடா படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இதனால் மீண்டும் இவர்கள் வெந்து தணிந்தது காடு படத்தில் இணைந்துள்ளதால் ரசிகர்கள் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்க ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படம் இந்த மாதம் 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Also Read : வெந்து தணிந்தது காடு படத்தை பார்த்த சிம்பு.. அவர் சொன்ன வார்த்தை நெஞ்செல்லாம் புண்ணா போச்சிங்க

மேலும் வெந்து தணிந்தது காடு படத்தின் இசை வெளியீட்டு விழா பல்வேறு காரணங்களினால் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. இந்நிலையில் இன்று மாலை 5 மணிக்கு பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ளது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக உலக நாயகன் கமலஹாசன் மற்றும் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்கின்றனர். ஒருவேளை சிம்புவின் அடுத்த படத்தை கமல் தயாரிக்க அதிக வாய்ப்புள்ளது. இந்நிலையில் இவ்விழாவுக்காக கமலஹாசன் மற்றும் சிம்பு இருவரும் ஹெலிகாப்டரில் வந்துள்ளனர்.

Also Read : பெரும் சிக்கலில் வெந்து தணிந்தது காடு.. உச்சகட்ட மன கஷ்டத்தில் சிம்பு

இவ்வாறு பிரம்மாண்டமாக வெந்து தணிந்தது காடு படத்தின் பிரமோஷனை படக்குழு செய்து வருகிறது. ஏற்கனவே இதுபோன்று விஜய் தேவர் கொண்டாவின் லைகர் மற்றும் விக்ரமின் கோப்ரா ப்ரோமோஷன் பிரம்மாண்டமாக நடைபெற்று படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்திருந்தது.

ஆனால் படம் வெளியாகி நெகட்டிவ் விமர்சனங்கள் மட்டுமே பெற்றது. அதேபோல் தற்போது வெந்து தணிந்தது காடு படத்திற்கும் ஓவர் பில்டப் கொடுத்து புசுன்னு போகாமல் இருந்தால் சரி என ரசிகர்கள் கூறி வருகின்றனர். மாநாடு படத்தை போல் சிம்புக்கு இப்படமும் வெற்றி கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Also Read : மொத்த ஹீரோயினையும் தூக்கி சாப்பிட்ட சிம்பு ஜோடி.. வெந்து தணிந்தது காடு லேட்டஸ்ட் போஸ்டர்

Continue Reading
To Top