ஓவியா…ஓவியா…ஒவியா எங்கு திரும்பினாலும் தமிழகத்தில் ஒலிக்கும் ஒரே பெயர். இதற்கு அவர் நயன்தாரா போல் தொடர் ஹிட் படங்களை கொடுக்கவில்லை, கீர்த்தி சுரேஷ் போல் எடுத்ததுமே முன்னணி நடிகர்கள் படத்தில் நடிக்கவில்லை.இவை அனைத்திற்குமே காரணம் பிக்பாஸ் வீடு என்றாலும், அந்த வீட்டிற்குள் இவர் எப்படி நடந்துக்கொண்டார் என்பதே இத்தனை ரசிகர்கள் பலத்திற்கும் மிக முக்கிய காரணம்.ஏனெனில், நான் என் இஷ்டத்திற்கு தான் இருப்பேன், நல்லவனுக்கு நல்லவள், கெட்டவனுக்கு கெட்டவள் என்ற பார்முலா தான் ஓவியாவின் மைண்ட் செட்.எப்போதும் சந்தோஷமாக இருக்கும் ஓவியாவை பார்த்து பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் அனைவருக்குமே கொஞ்சம் பொறாமை தான், அதோடு மக்கள் ஆதரவு வேறு.

இது அந்த தொலைக்காட்சிக்கு கொஞ்சம் TRP அச்சத்தை கொடுத்தது, ஆனால், ஓவியா அந்த வீட்டிற்குள் தன் சக போட்டியாளர்களால் முதல் 30 நாள் பெரும் கஷ்டத்தை அனுபவித்தார்.இதை யாராலும் மறுப்பதற்கு இல்லை, காயத்ரி எப்படியாவது ஓவியாவை காலி செய்ய வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தார், ஏனெனில் அவருக்கு தெரியும் ஓவியா தான் எல்லோருக்குமே சிம்மசொப்பனம் என்று.

அதிகம் படித்தவை:  Regina Cassandra Stills In Yellow Saree

இதன் காரணமாக தன்னுடன் நமீதா, ஜுலி, ரைஸா என அனைவரையு கூட்டு சேர்த்துக்கொண்டு அவரை மனதளவில் தாக்க முயற்சித்தார், இரவு 12 மணிக்கு ஒருவரை தூங்க விடமால் செய்வது ஒருவருக்கு எத்தனை கோபத்தை வரவைக்கும் என்பது அனைவரும் அறிந்ததே.அதையும் பொருத்துக்கொண்டு அடுத்துநாள் கமல் நமக்கு நல்ல தீர்ப்பு சொல்வார் என காத்திருந்த ஓவியாவிற்கு எல்லோரும் எதிப்பார்த்தது போல் கமலிடம் இருந்து பாசிட்டிவ் ரிசல்ட் தான்.

ஆனால், அதில் பலியாடு ஆனது ஜுலி தான், ஏனெனில் இந்த அனைத்து பிரச்சனைகளுக்கும் காரணம் காயத்ரி தான் என்பது கமலுக்கும் தெரியும், ஆனால், நண்பரின் மகள் என்பதால் கமல் இன்று வரை அவருக்கு கொஞ்சம் கண்டுக்கொள்ளாமல் தான் இருந்து வருகின்றார்.நமீதாவை கேள்வி கேட்கின்றார், ரைஸாவை கேட்கின்றார், ஜுலியை வெளுத்து வாங்குகின்றார், ஆனால், மூஞ்சும் முகர கட்டையும் என மோசமான வார்த்தைகளை பயன்படுத்திய காயத்ரியை கண்டுக்கொள்ளாதது, காயத்ரி நாம் செய்வது சரி என நினைத்து நேற்று வரை ஓவியாவை டார்ச்சர் செய்கின்றார்.

அதிகம் படித்தவை:  புள்ளபூச்சிக்கு எல்லாம் கொடுக்கு முளைக்கும்ன்னு எதிர்பார்க்கல: கோலி!

ஓவியா மனதளவில் ஏற்கனவே பாதிக்கப்பட்ட ஒரு பெண், ஆனால், மிக வலிமையாக இருந்தும், காதல் என்ற விஷயத்தில் அவரை எளிதில் வீழ்த்திவிடலாம் என்று அதற்கு ஏற்றார் போல் ஒரு டாஸ்க் கொடுத்து அவரின் மன வலிமையை சோதிக்கும் தொலைக்காட்சியை கமல் தடுத்து நிறுத்திருக்க வேண்டும்.ஆனால், அவரோ தானும் ஒரு சாதரண தொகுப்பாளன், சம்பளம் வாங்கிவிட்டேன், தொகுத்து வழங்கிவிட்டு செல்வேன் என்று நிலையிலேயே இருக்கிறார், இன்றும் கமல் காயத்ரியை கேள்வி கேட்கவில்லை என்றால், கமல்ஹாசனின் டுவிட்டர் பக்கம் அவரின் காமெடி படங்களில் வரும் வசனங்களாகவே ரசிகர்களுக்கு இனி தெரியும்.