விக்ரம் படத்தால் கமல்ஹாசனுக்கு வந்த நெருக்கடி.. தோத்தாலும் தப்பு, ஜெயிச்சாலும் தப்பா!

தமிழ் திரையுலகில் பிரபல தயாரிப்பாளர்களாக வலம் வரும் கலைப்புலி எஸ் தானு, எஸ் ஆர் பிரபு, மதுரை அன்புச் செழியன் ஆகியோரின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரி துறையினர் சோதனை செய்து வருகின்றனர். நேற்று அதிகாலை ஆரம்பித்த இந்த ரெய்டு இரண்டாவது நாளான இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

அதில் மதுரையைச் சேர்ந்த பைனான்சியர் அன்புச்செழியனுக்கு சொந்தமான வீடு, அலுவலகம் உள்ளிட்ட 40 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அதில் மதுரையில் 30 இடங்களும், சென்னையில் 10 இடங்களும் அடக்கம்.

தமிழ் சினிமா தயாரிப்பாளர்களுக்கு பைனான்ஸ் செய்து வரும் அன்புச் செழியன் திரைப்பட தயாரிப்பாளராகவும் இருக்கிறார். அந்த வகையில் தமிழ் திரையுலகில் முக்கிய புள்ளியாகவும் இவர் இருக்கிறார். இதனால் வருமான வரி துறையினர் இவரைத்தான் முதலில் வட்டமிட்டுள்ளனர்.

இந்த ரெய்டில் கணக்கில் காட்டப்படாத கோடிக்கணக்கான பண வர்த்தனைகளை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். மேலும் அதற்கான தகுந்த ஆவணங்களை கேட்டு விசாரித்து வருகின்றனர். இது எல்லாவற்றிற்கும் மேலாக கமலின் வலதுகரமாக செயல்பட்ட விஜய் டிவி மகேந்திரனையும் அவர்கள் குறி வைத்துள்ளனர்.

ஏனென்றால் பல காலமாக இவர் தான் கமலின் வரவு செலவு கணக்கை கவனித்து வந்துள்ளார். அது மட்டுமல்லாமல் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்த விக்ரம் திரைப்படம் 450 கோடிகளுக்கும் மேல் வசூலித்துள்ளது. இதற்காகவும் மகேந்திரனை வருமான வரித்துறையினர் டார்கெட் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனால் அவர்கள் அடுத்ததாக விக்ரம் படத்தின் கணக்கு வழக்குகளை பற்றி கமலிடம் விசாரித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. மேலும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மைய கட்சியினர் மின்கட்டண உயர்வை எதிர்த்து சில நாட்களுக்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதுவும் இதற்கான ஒரு காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்