வசூல் ராஜாவை வளைத்துப் போடும் கமல்.. உருவாகப் போகும் மாஸ் கூட்டணி

உலகநாயகன் கமலஹாசன் தற்போது சினிமா, அரசியல் என இரண்டிலும் முழுவீச்சாக செயல்பட்டு வருகிறார். இவர் ராஜ்கமல் பிலிம் இண்டர்நேஷனல் என்ற தயாரிப்பு நிறுவனத்தை வைத்துள்ளார். இந்நிலையில் கமல் தற்போது படங்களில் நடிப்பதைக் காட்டிலும் தயாரிப்பில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

லோகேஷ் கனகராஜ் தற்போது உலகநாயகனே வைத்து விக்ரம் படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் வருகிற ஜூன் 3 ஆம் தேதி விக்ரம் படம் வெளியாக உள்ளது.

இந்நிலையில் விஜய்யின் அடுத்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கயுள்ளார் என்ற செய்தி அண்மையில் வெளியானது. விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் தனது 66ஆவது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது பரபரப்பாக நடந்து வருகிறது.

ஏனென்றால் இந்த படத்தை இந்த ஆண்டு தீபாவளி அல்லது அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் மாஸ்டர் படத்தில் முதன்முதலாக இணைந்த விஜய், லோகேஷ் கனகராஜ் கூட்டணி பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது. இதனால் மீண்டும் தளபதி 67 இல் இணைய உள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் தற்போது விஜய்யின் படத்தை கமல் தனது ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. விஜய்யின் படங்கள் வசூல் ரீதியாக மிகப்பெரிய சாதனை படைத்து வருகிறது. சமீபத்தில் வெளியான பீஸ்ட் இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் வேட்டையாடியது.

இந்நிலையில் பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் விஜய்யின் படத்தை தயாரிக்க முன் வருகிறார்கள். இதனால் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள விஜய்யின் 67 வது படத்தை கமல் தயாரிக்க அதிக வாய்ப்பு உள்ளது. ஆனால் மாஸ்டர் பட கூட்டணி தான் மீண்டும் இந்த படத்தில் இணைவதாக தகவலும் வெளியாகி இருந்தது.

இதனால் தளபதி 67 வது படத்தை மாஸ்டர் பட தயாரிப்பாளர் லலித் தயாரிப்பார் என்றும் தளபதி 68 வது படத்தை கமல் தயாரிப்பார் என்று கூறப்படுகிறது. ஆனால் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மிக விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில் சிவகார்த்திகேயன், சாய்பல்லவி நடிப்பில் உருவாக உள்ள படத்தை கமல் தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

- Advertisement -