ஏதோ நூறு படங்களில் நடித்தவர் போல ஒரு இமேஜ் இருக்கிறதல்லவா ராஜ்கிரண் மீது? ம்ஹூம்… அவர் நடித்தது வெறும் முப்பத்தி சொச்சம் படங்களில்தான்! என்னவோ அப்படியொரு இமேஜ் அவர் மீது. தமிழ்சினிமாவின் மிக மிக மூத்த கலைஞர் என்று ஆராதிக்கிற அளவுக்கு இருக்கிறது அவருக்கான ரசிகர் கூட்டம். இந்த மித்… மீது சொத் சொத்தென்று அவர் விடும் அடிகள்தான் இந்த மேட்டரின் மெயின் பிக்சரே!

‘பணத்துக்காகதான் சின்னத்திரை பக்கம் வந்தேன்’ என்று ஓப்பனாகவே பேட்டியளித்திருக்கும் கமல், பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியை விஜய் தொலைக்காட்சிக்காக தரப்போகிறார். இதில் ஒவ்வொரு வாரமும் பிரபலங்களையும் பொதுமக்களையும் அவர் சந்தித்து பேசுவதாக நிகழ்ச்சி அமைந்திருக்குமாம். அப்படி பிரபலங்கள் லிஸ்ட் என்று ஒரு பெரிய லிஸ்ட்டே போட்டதாம் மேற்படி டி.வி.

அதில் ராஜ்கிரண் பெயரையும் சேர்த்திருக்கிறார்கள். அண்ணன் கமல் சார்பில், பெரியண்ணன் ராஜ்கிரணிடம் பேசப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள, அவரே எதிர்பார்க்காதளவுக்கு ஒரு பெருத்த தொகையை தரவும் முன் வந்ததாம் விஜய் டி.வி.

விளம்பரங்களில் நடிக்க மாட்டேன் என்பதை ஒரு கொள்கையாகவே வைத்திருக்கும் ராஜ்கிரண், இந்த நிகழ்ச்சியையும் ஒரு விளம்பரப் படம் போல நினைத்துவிட்டாரோ என்னவோ? கமல் சாரே கூப்பிட்டாலும் ஐ ஆம் ஸாரிதான் என்றாராம். பேச்சு வார்த்தையில் துளி கூட முன்னேற்றம் இல்லாததால், முகம் வாடிப் போனார்களாம் அழைத்தவர்கள்.

பிரச்சனை கமல் கூடவா? சேனல் கூடவா? தெளிவா சொல்லுங்க பாய்…?