Tamil Cinema News | சினிமா செய்திகள்
அர்ச்சனாவின் கொட்டத்தை அடக்கிய கமல்.. தல இருக்குறப்ப வால் ஆடக்கூடாது.. கழுவி ஊத்தும் நெட்டிசன்கள்!
விஜய் டிவியில் பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது நாள்தோறும் சுவாரஸ்யம் குறையாமல் மக்களை வெகுவாக ஈர்த்து வருகிறது.
அந்த வகையில் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமையிலுயும், இந்த நிகழ்ச்சியை உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்குவது வழக்கம்.
இந்த நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக வீட்டுக்குள் நுழைந்த அர்ச்சனா, சவுண்ட் பார்ட்டியாக பிக்பாஸ் வீட்டையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தார்.
ஏனென்றால், வீட்டில் நடக்கும் எல்லா பிரச்சனைகளிலும், மூக்கை நுழைத்து பஞ்சாயத்து பண்ணி தீர்த்து வைக்கும் நாட்டாமை வேலையை பார்த்து வந்தார்.
இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த கமல், ‘நீங்கள் வெளியில் செய்துகொண்டிருந்த தொகுப்பாளினி வேலையை, பிக்பாஸ் வீட்டிலும் பார்க்காதீர்கள்’ என்று கடுமையாகப் பேசி. அர்ச்சனாவின் கொட்டத்தை அடக்கினார் கமல்.
எனவே இதன் பிறகாவது அர்ச்சனா, அவங்க வேலைய மட்டும் பிக்பாஸ் வீட்டில் பாப்பாங்க.. என்று ஹவுஸ் மேட்களும், ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
