இந்தியன் 1996 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா, சுகன்யா, நாசர், கவுண்டமணி, செந்தில் மற்றும் பலரும் நடித்துள்ளனர். ஏ. எம். ரத்னம் தயாரிப்பில் உருவான இத்திரைப்படத்தை ஸ்ரீ சூர்யா மூவீஸ் வெளிவிட்டது. இப்படம் 1995-ல் வெளியான பாட்ஷா பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது.

இந்தியன். சுதந்தரப் போராட்டத் தியாகி, லஞ்சத்தை எதிர்த்து மேற்கொள்ளும் நடவடிக்கைகள் படத்தின் மையக்கருவாக அமைந்தன. இந்நிலையில் இந்தியன் 2 படத்துக்காக ஷங்கர், கமல் ஆகிய இருவரும் மீண்டும் இணைந்துள்ளார்கள்.

இந்தியன் படம் மூன்று தேசிய விருதுகளைப் பெற்றது. சிறந்த நடிகருக்கான விருதை கமல் பெற்றார். சிறந்த கலை இயக்கத்துக்காக தோட்டா தரணிக்கும் சிறந்த ஸ்பெஷல் எஃபெக்ட்ஸுக்காக வெங்கிக்கும் தேசிய விருதுகள் கிடைத்தன. மேலும் இந்தப் படம் இந்தியாவின் சார்பாக ஆஸ்கருக்கும் பரிந்துரை செய்யப்பட்டது.

இதன்பிறகு கமலும் ஷங்கரும் இணையும் சூழல் வந்தபோதும் அது நிறைவேறாத நிலையில் 21 வருடங்களுக்குப் பிறகு இருவரும் கைகோத்துள்ளார்கள். தெலுங்குத் திரைப்படத் தயாரிப்பாளர் தில் ராஜு, இவர்கள் கூட்டணியில் உருவாகும் இந்தியன் 2 படத்தைத் தயாரிக்கவுள்ளார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் இப்படம் உருவாகவுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகவுள்ள பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதிப்போட்டியில் இந்தியன் 2 குறித்த அறிவிப்பு வெளியாகவுள்ளது. இயக்குநர் ஷங்கர், தயாரிப்பாளர் ஆகியோருடன் இணைந்து இந்த அறிவிப்பை கமல் வெளியிட்டர்.

கமல், விரைவில் அரசியலுக்கு வர உள்ள நிலையில் அதன் வெளிப்பாடாக படத்தில் அரசியல் மற்றும் ஊழல் சார்ந்த விஷயங்கள் நிறைய இருக்கும் என்று கூறப்படுகிறது

பாஸ்போர்ட் சைஸ் போட்டோ எடுக்கப் போனால் கூட தன் முக ரேகைகளில் மை தடவி அரசியல் வீசுவார் போலிருக்கிறது கமல்? அந்தளவுக்கு நாட்டு நலனில் திடீர் அக்கறை பிய்த்துக் கொண்டு ஓடுகிறது அவரது பேச்சில், செயலில், எரிச்சலில், புகைச்சலில்!

அப்படிப்பட்டவருக்கு இந்தியன் 2, கைக்குக் கிடைத்த கேரம் போர்டு அல்லவா? எல்லா விரல்களாலும் அடிக்க ஆரம்பித்திருக்கிறார். அதில் முதல் அடி இதுதான். கமல் அரசியலுக்கு வருவாரா, மாட்டாரா? வந்தாலும் தேறுவாரா? இப்படியெல்லாம் முணுமுணுக்கும் மக்களுக்கு, ‘நான் தலைவனாகிட்டேன்’ என்று சொல்லும் விதமாக ஒரு டைட்டிலை ‘ச்சூஸ்’ பண்ணியிருக்கிறாராம் அவர்.

அதை ஷங்கரிடம் சொல்ல, அவரும் சம்மதித்துவிட்டதாக தகவல்.

அப்படியென்ன பொல்லாத தலைப்பு?

‘லீடர்’!

கிடைக்கிற பொழுதெல்லாம் வாள் வீசுகிறவன்தான் லீடர். இப்போதைய ‘கொதிநிலை’ கமலுக்கு இது பொருத்தமான தலைப்புதான்!இப்படி எல்லாரும் அரசியல் வரங்களே என்று சில பேர் முனு முனுமுனுக்கிறார்கள்