Tamil Cinema News | சினிமா செய்திகள்
இந்தியன்-2 படத்தில் மோடி மோசடியை கையில் எடுக்கிறாரா கமல்.? அதிர்ச்சி தகவல்
நடிகர் கமல் தற்பொழுது அரசியலில் தீவிரமாய் இறங்கிவிட்டார் இனி கமல்ஹாசனை உலக நாயகன் மட்டும் இன்றி மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் என்றும் அழைக்கலாம். சமீபத்தில் இவர் அந்த அளவிற்கு பிரமானடமாக தனது கட்சியின் தொடக்க விழாவை மிக அமைதியாக நடத்தி காட்டினார்.
கமல் தனது கட்சியின் கோடி, கொள்கை ஆகியவை தென்னிந்தியாவையும், திராவிடத்தையும் குறிக்கும் வகையில் இருந்தது நடிகர் கமல் அடுத்த படமான இந்தியன்-2 திரைப்படம் நடிக்க இருக்கிறார் இந்த திரைப்படம் தேசிய அளவில் நடந்த ஊழலை வெளிச்சம் பொட்டு காட்டும் வகையிலான கதை என கூறபடுகிறது.
அதாவது கடந்த சில நாட்களாக நாட்டையே பரபரப்பாகியுள்ள ஒரு விஷயம் வங்கியில் 11500 கோடி மோசடி செய்து விட்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய ஒரு நீரவ் மோடி என்ற தொழிலதிபர் தான் இந்த படத்தின் கதையாக இருக்கும் என கூறபடுகிறது நீரவ் மோடியின் மோசடி கையில் எடுக்கும் ஷங்கர் மற்றும் கமல் இந்த படம் தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கபடுகிறது.
