indian

இந்தியன் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா, சுகன்யா, நாசர், கவுண்டமணி, செந்தில் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

ஏ. எம். ரத்னம் தயாரிப்பில் உருவான இத்திரைப்படத்தை ஸ்ரீ சூர்யா மூவீஸ் வெளிவிட்டது. இப்படம் 1995-ல் வெளியான பாட்ஷா பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது.

indian

இந்தியன். சுதந்தரப் போராட்டத் தியாகி, லஞ்சத்தை எதிர்த்து மேற்கொள்ளும் நடவடிக்கைகள் படத்தின் மையக்கருவாக அமைந்தன. இந்நிலையில் இந்தியன் 2 படத்துக்காக ஷங்கர், கமல் ஆகிய இருவரும் மீண்டும் இணைந்துள்ளார்கள்.

இந்தியன் படம் மூன்று தேசிய விருதுகளைப் பெற்றது. சிறந்த நடிகருக்கான விருதை கமல் பெற்றார்.

சிறந்த கலை இயக்கத்துக்காக தோட்டா தரணிக்கும் சிறந்த ஸ்பெஷல் எஃபெக்ட்ஸுக்காக வெங்கிக்கும் தேசிய விருதுகள் கிடைத்தன. மேலும் இந்தப் படம் இந்தியாவின் சார்பாக ஆஸ்கருக்கும் பரிந்துரை செய்யப்பட்டது.

indian2

விக்ரமின் ‘ஐ’ படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘2.0’. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

இதனைத் தொடர்ந்து ஷங்கர் ‘இந்தியன்’ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கத் திட்டமிட்டுள்ளார்.

1996-ஆம் ஆண்டு ரிலீஸான இதன் முதல் பாகத்தில் ‘உலக நாயகன்’ கமல்ஹாசன் டபுள் ஆக்ஷனில் அசத்தியிருந்தார். பார்ட்-1 மெகா ஹிட் என்பதால் இப்போதே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

indian

இதிலும் கமல்ஹாசனே ஹீரோவாக நடிக்கவிருக்கிறார். முதல் பாகத்தை தயாரித்த ஏ.எம்.ரத்னமே தயாரிக்கவுள்ளாராம்.

படத்தின் ஒளிப்பதிவாளராக ரவி வர்மன் கமிட்டாகியிருப்பதாக கூறப்படுகிறது. தற்போது, இதற்கு இசையமைக்க ‘ராக்ஸ்டார்’ அனிருத் ஒப்பந்தமாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் டிவிட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.