விக்ரமின் ‘ஐ’ படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘2.0’. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

indian

1996-ஆம் ஆண்டு ரிலீஸான இதன் முதல் பாகத்தில் ‘உலக நாயகன்’ கமல்ஹாசன் டபுள் ஆக்ஷனில் அசத்தியிருந்தார். பார்ட்-1 மெகா ஹிட் என்பதால் இப்போதே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இதிலும் கமல்ஹாசனே ஹீரோவாக நடிக்கவிருக்கிறார்.

20 வருடங்களுக்கு முன்பு ஷங்கர் கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகி இருந்த இந்தியன் படத்தின் வேற்றையை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் தொடங்க உள்ளதாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் நாளில் அறிவிப்பு வெளியானது.

இதனையடுத்து படத்தை பற்றி எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்நிலையில் தற்போது இந்த படத்தை பற்றி தகவல் ஒன்று கசிந்துள்ளது.

indian

‘ராக்ஸ்டார்’ அனிருத் இசையமைக்கவுள்ள இதற்கு ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.

அது என்னவென்றால் 2018 மார்ச் மாதத்தில் இந்தியன்-2 படத்தின் படப்பிடிப்பை தொடங்கி 2019 மார்ச் மாதத்திற்குள் படத்தின் அனைத்து பணிகளையும் முடித்து விட ஷங்கர் திட்டம் தீட்டியுள்ளாராம்.

பொதுவாகவே ஒரு படத்தை இரண்டு வருடங்கள் எடுப்பார் ஷங்கர். ஆனால், இந்தப் படத்தை ஒரு வருடத்திற்குள் முடிக்கத் திட்டமிட்டுள்ளார்.

indian2

கமல்ஹாசனின் அரசியல் திட்டமிடலும், ஷங்கரின் திட்டமிடலும் ஒத்துவந்தால், ஒரு வருடத்திற்குள் படத்தை முடித்துவிடலாம். அதில் மாற்றங்கள் ஏற்பட்டால், படப்பிடிப்பிலும் மாற்றங்கள் ஏற்படும்.

சமீப காலமாக ஷங்கரின் எந்த படமும் ஒரு வருடத்திற்குள் முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது, மேலும் இந்த இந்தியன்-2 படத்தையும் லைக்கா நிறுவனம் தயாரிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.