Tamil Cinema News | சினிமா செய்திகள்
65 வயது கமல்ஹாசனுக்கு ஜோடியாக 27 வயது இளம் பிரபல நடிகை.. உருவாகும் சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகம்
கமலஹாசன் அரசியலில் பெரிய அளவில் மக்களிடம் சென்றடையாத காரணத்தினால் மீண்டும் சினிமாவில் தொடர்ந்து நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் தற்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
அதனைத் தொடர்ந்து தேவர்மகன்-2 என அழைக்கப்படும் தலைவன் இருக்கின்றான் படத்திலும் நடிப்பதற்கான வேலைகளை ஆரம்பித்துவிட்டார். அதுபற்றி அந்த படத்தின் இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மானுடன் சமீபத்தில் கலந்துரையாடினார்.
மேலும் அந்த படத்தில் கமல்ஹாசனுக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க உள்ளாராம். இதற்கிடையில் கமலஹாசனின் முன்னாள் சூப்பர் ஹிட் படமான வேட்டையாடு விளையாடு படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாக உள்ளதாம்.
வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிக்கும் அந்த படத்தை கௌதம் மேனன் இயக்க உள்ளார். இந்நிலையில் அந்த படத்துக்கான வேலைகள் படு பயங்கரமாக நடந்து வருகின்றன. அதிலும் ஹீரோயின் செலக்சன் தாறுமாறாக இருந்து வருகிறது.
ஜோதிகா தற்போது நடிக்க வாய்ப்பு இல்லாத காரணத்தினால் நடிகை அனுஷ்காவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. அனுஷ்கா கேட்ட சம்பளம் தயாரிப்பாளர் தரப்பு ஒத்து வராததால் நிராகரித்து விட்டனர்.
இந்நிலையில் அந்த படத்தில் வாய்ப்பு இல்லாமல் தடுமாறி வரும் கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாராம். அப்பா வயது இருக்கும் கமல்ஹாசனுடன் ஜோடி போட உள்ள கீர்த்தி சுரேசை அனைவரும் பாவமாக பார்த்து வருகின்றனர்.
