கமல்ஹாசன் நடிப்பில் ரசிகர்கள் விஸ்வரூபம் 2 படத்திற்காக ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் இப்படத்தையும் தாண்டி சினிமா ரசிகர்கள் அனைவரும் எதிர்ப்பார்ப்பது மருதநாயகம் படத்திற்காக தான்.

பாதியில் நின்ற இப்படத்தின் வேலைகள் மீண்டும் தொடங்க இருப்பதாகவும் லைகா நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் செய்திகள் வந்தன. அதோடு இளையராஜாவும் படத்தில் இடம்பெறும் ஒரு பாடலையும் வெளியிட்டிருந்தார்.

அதன்பிறகு படத்தின் அப்டேட் என்ன என்பது வெளியாகாமல் இருந்தது. இந்த நிலையில் உலக சினிமா படங்கள் இடம்பெறும் கேன்ஸ் திரைப்பட விழாவில் இப்பட போஸ்டர் இடம்பெற்றுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் குஷியில் இருக்கின்றனர்.

இந்த கேன்ஸ் பட விழாவில் சுந்தர் சி இயக்கும் சங்கமித்ரா பட போஸ்டர்களும் இடம்பெற்றுள்ளது.