Connect with us

Cinemapettai

வேட்டையாடு விளையாடு படத்தில் நடித்துள்ள கௌதம் மேனனின் தந்தை.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

gautham menon kamal haasan

Tamil Cinema News | சினிமா செய்திகள்

வேட்டையாடு விளையாடு படத்தில் நடித்துள்ள கௌதம் மேனனின் தந்தை.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

கமல்ஹாசன் நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் தமிழ் ரசிகர்களிடம் நீங்காத இடத்தைப் பிடித்துள்ளன. அதற்கு காரணம் படத்தின் கதையம்சமும் இவரது வித்தியாசமான நடிப்பு தான். கமல்ஹாசன் நடித்த பெரும்பாலான படங்கள் காலம் கடந்தும் கொண்டாடக்கூடிய படங்களாகவே உள்ளன.

கமல்ஹாசனை வைத்து பல இயக்குனர்கள் எப்படியாவது சினிமாவில் ஒரு படத்தையாவது இவரை வைத்து இயக்கி விட வேண்டுமென்று கனவு கண்டதெல்லாம் உண்டு. அப்படி கமலஹாசனை வைத்து படத்தை இயக்க வேண்டும் என்று கனவு கண்டவர் நம்முடைய கௌதம் மேனன் இதனை அவரே பலமுறை கூறியுள்ளார்.

அப்படி அவருக்காகவே கதையை உருவாக்கி வைத்திருந்தது தான் வேட்டையாடு விளையாடு திரைப்படம். இப்படத்தின் கதையை கமல்ஹாசனிடம் கூறி பின்பு அவர் நினைத்தபடியே கமல்ஹாசனை வைத்து படத்தை இயக்கினார். இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

gautham menon father

gautham menon father

இதுவரைக்கும் வேட்டையாடு விளையாடு படத்தில் கௌதம் மேனன் நடித்துள்ளார் என்பது தான் அனைவருக்கும் தெரியும். ஆனால் கவுதம் மேனன் அவரது தந்தையின் படத்தில் நடிக்க வைத்துள்ளார். அது பலருக்கும் தெரியாது.

அதாவது கமல்ஹாசன் படத்தில் எப்படியாவது நானும் என் தந்தையும் நடித்துவிட வேண்டும் என்ற ஆசையில்தான் ஒரே ஒரு காட்சியில் மட்டும் தனது தந்தையின் நடிக்க வைத்துள்ளதாக சினிமா வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதுமட்டுமில்லாமல் இவரது தந்தை நடித்துள்ள புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
To Top