Connect with us

Cinemapettai

maruthanayagam

Cinema News | சினிமா செய்திகள்

மருதநாயகம் படத்தில் மாற்றப்படும் கதாநாயகன்.. கமல் வெளியிட்ட பரபரப்பு விளக்கம்

நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த மருதநாயகம் படம் மீண்டும் தூசி தட்டப்பட இருப்பதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். ஆனால் இந்த டிவிஸ்ட் இருக்கும் என யாரும் எதிர்பார்க்கவில்லை.

பிரபல நாளிதழ் ஒன்றுக்கு சமீபத்தில் பேட்டியளித்த கமல் மருதநாயகம் படம் பற்றிய ரகசியத்தை வெளியிட்டுள்ளார். நீண்ட நாட்களாக தமிழ் சினிமாவே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் திரைப்படம் மருதநாயகம். கமல்ஹாசனே இந்த படத்திற்கு திரைக்கதை எழுதி உள்ளதால் எதிர்பார்ப்பு பன்மடங்காக்கியது.

படம் ஆரம்பிக்கப்பட்ட காலகட்டத்தில் போதுமான டெக்னாலஜிகல் மற்றும் வணிக சப்போர்ட் இல்லாததால் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது. தற்போது மீண்டும் அந்தப் படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பாக தயாரிக்க உள்ளதாக தெரிவித்தார்.

மேலும் படத்தில் நான் நடிக்க முடியாது என வெளிப்படையாக தெரிவித்து விட்டார். ஆனால் நடிகர் விக்ரம் நடிக்க வாய்ப்பு உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடாரம் கொண்டான் படத்தின் போதே விக்ரமுடன் ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இதன் மூலம் உறுதி செய்யப்பட்டது. விக்ரம் தற்போது அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடித்து வருகிறார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top