புதன்கிழமை, பிப்ரவரி 19, 2025

நடிப்பைத் தாண்டி பணத்தை குறிவைக்கும் கமல்.. இதுதான் காரணமா.?

ஆரம்ப காலத்தில் நடிப்புக்கு மட்டுமே முக்கியத்துவம் அளித்து நடித்து வந்த கமல் சமீபகாலமாக பணத்திற்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார். முன்பெல்லாம் படங்களில் மட்டுமே அதிக கவனம் செலுத்தி தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தி வந்தார். அதனால் தான் அவர் உலக நாயகன் என அனைவராலும் அழைக்கப்பட்டார்.

ஆனால் தற்போது கமல் சினிமா மற்றும் நடிப்பை ஒரு கலையாக பார்க்காமல் வியாபார நோக்கில் பார்ப்பதாக கூறப்படுகிறது. கமல் முன்பும் படங்களை இயக்கினார், தயாரித்தார் ஆனால் தற்போது அரசியலில் நுழைந்த பின்னர் அவரின் நோக்கம் முழுவதும் பணம் சம்பாதிப்பதில் மட்டுமே இருப்பதாக கூறப்படுகிறது.

அதன்படி தற்போது கமல் பல வழிகளில் லாபம் பார்த்து வருகிறார். அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி ஒரு பெரிய தொகையை சம்பளமாக பெற்று வருகிறார். இதுதவிர விக்ரம் படத்தை தயாரித்து வருகிறார். மேலும் சிவகார்த்திகேயன் படத்தின் தயாரிப்பாளருடன் இணைந்து கமலும் அந்த படத்தை தயாரித்து வருகிறார்.

அதுமட்டுமின்றி கதர் ஆடைகளை ஏற்றுமதி செய்யும் நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். அதேபோல் தனது பழைய படங்களில் சிறந்த படங்களின் ரீமேக் உரிமையையும் கைவசம் வைத்துள்ளாராம். இப்படி பல வழிகளில் கமல் கணிசமான லாபம் பெற்று வருகிறார். .

ஆனால் இதற்கான காரணம் என்ன என்பது தான் தெரியவில்லை. ஆனால் சிலரோ கமல் வரும் தேர்தலுக்காக தான் இவ்வளவு பணம் சம்பாதித்து வருகிறார் என கூறுகிறார்கள். கடந்த தேர்தலில் விட்டதை இந்த தேர்தலில் கைப்பற்ற முயற்சி செய்கிறாராம்.

இன்னும் சிலர் கமல் அவரின் கனவுப்படமான மருதநாயகம் படத்தை மீண்டும் எடுக்க உள்ளார். அதற்காக தான் இவ்வளவு பணம் சேர்தது வருகிறார் என கூறுகிறார்கள். இதில் எது உண்மை என தெரியவில்லை. பொறுத்திருந்து பார்க்கலாம்.

Trending News