பழைய ட்ரிக்கை கையிலெடுத்த கமல்.. விக்ரமில் செய்திருக்கும் தந்திரம்

கமலஹாசன் சினிமா துறையில் உலகநாயகன் என்ற பெயருக்கு பொருத்தமானவர் தான். தொடக்கத்திலிருந்தே சினிமாவை வேறு ஒரு கண்ணோட்டத்தில் பார்த்தவர் கமலஹாசன். ஆரம்பத்திலிருந்தே கமல் படங்களை சற்று கவனித்தால் அந்தந்த காலகட்டத்தில் யார் அதிகம் பேசப்படுகிறார்கள், யாருக்கு அதிகம் கவனிப்பு இருக்கிறது, யார் அந்த நேரத்தில் மிகவும் புகழில் இருக்கிறார் என்பதையெல்லாம் உன்னிப்பாக கவனித்து தனக்கென்றே ஒரு கணிப்பை மனதில் வைத்துக் கொள்வார்.

அவரது படத்தில் அந்த நடிகர்களை போட்டு காரியத்தை சாதித்து விடுவார். இதையெல்லாம் வைத்துப் பார்த்தால் ஒரு சில படங்களில் கமலஹாசன் இந்த அணுகு முறையையே பயன்படுத்தியது தெரியவருகிறது. அப்படித்தான் கமலஹாசன் நடிப்பில் 1995 ஆம் ஆண்டு ஸ்ரீராம் இயக்கத்தில் வெளிவந்த ‘குருதிப்புனல்’ படத்தில் தன்னுடன் ஆக்சன் கிங் அர்ஜுன் நடிக்க வைத்திருப்பார்.

அதேபோன்று சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த கமலஹாசனின் நடிப்பில் 2003 ஆம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்த ‘அன்பே சிவம்’ திரைப்படத்தில் அந்த சமயத்தில் சாக்லேட் பாயாக ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட நடிகர் மாதவனை தன்னுடன் இணைந்து நடிக்க வைத்திருப்பார்.

கடந்த 2000 ஆம் ஆண்டில் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் வெளியான ‘தெனாலி’ திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன வாயிலாக ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற படமாகும். இந்த படத்தில் கமலஹாசனுடன் அப்பொழுது தமிழ் ரசிகர்களிடம் பிரபலமான ஜெயராம் சேர்ந்து நடித்திருப்பார்.

இதேபோன்று 1998-ஆம் ஆண்டு கமலஹாசன் நடிப்பில் வெளியான ‘காதலா காதலா’ திரைப்படத்தின் மூலம் அப்போது நடனத்திலும் நடிப்பிலும் உச்சத்தில் இருந்த பிரபுதேவாவை அந்தப் படத்தில் தன்னுடன் இணைந்து நடிக்க வைத்து படத்தை வேற லெவலுக்கு ஹிட் கொடுக்கும்படி செய்திருக்கிறார்.

அதேபோல்தான் இப்பொழுது ஜூன் 3 ஆம் தேதியான நாளை ரிலீசுக்காக காத்திருக்கும் உலகநாயகன் கமலஹாசன் நடித்து தயாரித்திருக்கும் விக்ரம் படத்திலும் விஜய்சேதுபதி, ஃபகத் பாசில் என புகழில் இருக்கும் நடிகர்களை போட்டு படத்தின் வெற்றியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்.

Next Story

- Advertisement -