Connect with us
Cinemapettai

Cinemapettai

kamal-sarika-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கமல்ஹாசன் முதல் மனைவி சரிகாவுக்கு நடத்த சோகம்.. ஆதரவு தந்த முன்னணி நடிகர்!

90களின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை சரிகா. இவர் உலக நாயகன் கமலஹாசனை காதலித்து கரம் பிடித்தார். 2004 ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக கமலை விட்டு பிரிந்தார் சரிகா. 

சரிகாவின் மும்பை பிளாட் தொடர்பான சட்ட மோதலுக்கு பாலிவுட் ஸ்டார் அமீர்கான் ஆதரவளித்து உதவிக்கரம் நீட்டியுள்ளார்.

மும்பையில் ஜூகோவில் இருந்த பிளாட்டின் முழு அதிகாரத்தையும் பெற்ற சரிகாவின் தாயாரோ, பெற்ற மகளுக்கு துரோகம் செய்து அந்த  பிளாட்டை விகாஸ் தாகருக்கு எழுதிக் கொடுத்துவிட்டார். இதனால் வீடற்று நிற்கதியில் நிற்கிறார் சரிகா.

சட்ட மோதலில் ஈடுபட்ட சரிகாவிற்கு உதவிபுரிய யாரும் இல்லாத நேரத்தில், சரிகாவின் தோழியின் மூலம் அமீர்கானின் உதவியை நாடியுள்ளார்.

“இதைப்பற்றி தான் நன்றாக படித்து ஆராய்ந்து விட்டு சிறந்த முறையில் இந்த பிரச்சனையை தீர்த்து தருகிறேன்” என்று அமீர்கான் சரிக்காவிற்கு உதவி செய்ய முன்வந்துள்ளார். 

சரிகாவின் இரண்டாவது மகளான அக்ஷரா ஹாசன் தந்தை கமலுடனும், ஸ்ருதிஹாசன் மும்பையில் தனியாக ஒரு ஃப்ளாட் வாங்கியும் செட்டிலாகி இருக்கிறார்கள்.

Continue Reading
To Top