Connect with us

Cinemapettai

எம்.ஜி.ஆர் படத்தில் நடிக்கயிருந்த கமலஹாசன்.! ஆனால் யாரால் இப்படம் கைவிடப்பட்டது. அவரே கூறிய பதில்

kamal haasan

Cinema News | சினிமா செய்திகள்

எம்.ஜி.ஆர் படத்தில் நடிக்கயிருந்த கமலஹாசன்.! ஆனால் யாரால் இப்படம் கைவிடப்பட்டது. அவரே கூறிய பதில்

எம்ஜிஆருடன் நடிக்க முடியாமல் போனதற்கான காரணத்தை கூறிய கமல்ஹாசன். எந்த படம் என்ன காரணம்

கமலஹாசன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். அப்போது போட்டியாளர்கள் கமலஹாசனிடம் சில கேள்விகளை கேட்டனர். அதற்கு சலிக்காமல் பதில் சொன்னார். கமலஹாசனிடம் ஒரு போட்டியாளர் உங்கள் மீதான விமர்சனங்களை நீங்கள் எப்படி சந்திக்கிறீர்கள் என கேட்டனர்.

அதற்கு கமலஹாசன் என் மீதான விமர்சனங்களை எனக்கு பயன்படும் விஷயங்கள் மட்டுமே எடுத்துக் கொள்வேன். விமர்சனத்துக்கு விமர்சனம் சொல்லும் பழக்கம் எனக்கு இல்லை என தெரிவித்தார். நான் எது சொன்னாலும் அவர்கள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை அதனால் அதற்கான முயற்சி செய்வதில்லை என தெரிவித்தார்.

மேலும் எம்ஜிஆருடன் நாளை நமது படத்தில் அவருக்கு தம்பியாக நான் நடிப்பதாக இருந்தேன் எனக்காக ஒரு மாத காலம் எம்ஜிஆர் காத்திருந்தார். ஆனால் சில சூழ்நிலைகளால் அந்த படத்தில் நான் நடிக்கவில்லை ஆனால் அந்த படத்தில் நடித்து இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என அறிவித்தார்.

உங்களுடைய கடுமையான தருணங்களில் யார் தோள் கொடுத்தார் என கேள்வி கேட்டதற்கு கமலஹாசன் நான் ‘ தோள் கண்டேன் தோளே கண்டேன் ’ என தெரிவித்தார். மேலும் விஸ்வரூபம் படத்தினால் ஏற்பட்ட பிரச்சனையின் போது எனக்காக ஒட்டுமொத்த தமிழ் மக்களும் ஒன்று சேர்ந்தனர். அது என் வாழ்நாளில் மறக்க முடியாதது மேலும் எனக்காக தான் வாழும் 200 அடி வீட்டை எழுதி கொடுக்க ஒருவர் முன் வந்தார் என தெரிவித்தார்.

எனக்காக இத்தனை பேர் இருப்பதை பார்க்கும் போது தான் அவர்களுக்காக என்னால் என்ன செய்ய வேண்டும் எனத் தெரியாமல் காலத்தை கடத்தி வருகிறேன். என்னுடைய வாழ்க்கையில் இனிமேல் மக்களுக்காக தான் என சொல்லுவது சினிமா வசனத்திற்காக அல்ல உங்களுடைய அன்பை நான் கடனாக பெற்று விட்டேன் என்னால் வட்டியை மட்டுமே கட்ட முடிகிறது. மேலும் இந்த அன்பு கடனை அடைக்க முடியாது ஆனால் உங்களுக்காக என் வாழ்க்கையை செலவழிக்க முடியும் என தெரிவித்தார்.

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top