fbpx
Connect with us

Cinemapettai

மீண்டும் பழைய கமல்ஹாசன்- புதிய படத்தின் கேரக்டர் பற்றிய தகவல்

News | செய்திகள்

மீண்டும் பழைய கமல்ஹாசன்- புதிய படத்தின் கேரக்டர் பற்றிய தகவல்

kamal-haasanஉலக நாயகன் கமல்ஹாசனின் அடுத்த படத்தின் தொடக்கவிழா நாளை நடிகர் சங்கத்திற்கு சொந்தமான இடத்தில் நடைபெறவுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இந்த படத்தில் கமல்ஹாசன் எந்த கேரக்டரில் நடிக்கின்றார் என்பது குறித்த தகவல் இதுவரை வெளிவராத நிலையில் தற்போது முதல்முறையாக இதுகுறித்து சில விபரங்கள் வெளியாகியுள்ளது.

கமல்ஹாசன் இதுவரை பல வித்தியாசமான கேரக்டர்களில் நடித்துள்ளார். இந்நிலையில் ஏற்கனவே நடித்த மிகப்புகழ் பெற்ற ஒரு கேரக்டரைத்தான் இந்த புதிய படத்திற்கு கமல் தேர்வு செய்துள்ளாராம். அந்த கேரக்டரின் பெயரை நாளை நடைபெறவுள்ள தொடக்கவிழாவில் கமல் அறிவிக்க உள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

முதல்முதலாக தந்தை கமல்ஹாசனுடன் ஸ்ருதிஹாசன் நடிக்கும் இந்த படத்தில் ரம்யாகிருஷ்ணன், பிரம்மானந்தம் ஆகியோர்களும் முக்கிய கேரக்டர்களில் நடிக்கின்றனர். இளையராஜா இசையில், கமலின் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் அமெரிக்காவில் படமாக்கப்படவுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top