உலக நாயகன் கமல்ஹாசன் சமீபத்தில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பி ஓய்வு எடுத்து வருகிறார். அவர் நடித்து இயக்கி வரும் ‘சபாஷ் நாயுடு’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

இந்நிலையில் தற்போது நிகழ்ந்து வரும் சென்சிட்டிவ் பிரச்சனையான காவிரி பிரச்சனை குறித்து தனது வேதனையை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

நாம் மொழியற்ற குரங்குகளாயிருந்த போதும் காவிரி ஓடியது. நமக்குப் பின்னும் அது ஓடும். சரித்திரக் கண்ணாடியில் முகம் பார்த்து வெட்க வேண்டி வரும்’ என்று தனது வேதனையை தெரிவித்துள்ளார்