எம்ஜிஆர், சிவாஜிக்கு கற்றுக்கொடுத்த கமலஹாசன்.. அப்பவே தலைவன் வேற லெவல்

4 வயதில் குழந்தை நட்சத்திரமாக தோன்றிய உலகநாயகன் கமலஹாசன் இன்று முதல், இன்றுவரை சினிமாவிற்காக தன்னையே அர்ப்பணித்துள்ளார். இவர் நடிக்கும் ஒவ்வொரு படங்களிலும் மாறுபட்ட வேடத்தில் நடித்த அசத்தியிருப்பார். தமிழில் மட்டுமல்லாமல் பிற மொழிகளிலும் சுமார் 220 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார்.

நடிப்பில் மட்டுமல்லாமல் தயாரிப்பாளர், இயக்குனர், பாடகர் என பன்முகத் திறமை கொண்ட உலகநாயகன், தமிழ் சினிமாவின் ஜாம்பவானாக இருக்கும் எம்ஜிஆர், சிவாஜி படங்களுக்கு நடன இயக்குனராக கமல் பணியாற்றி அவர்களுக்கு நடனம் கற்றுக் கொடுத்திருக்கிறார்.

சவாலே சமாளி : சிவாஜிகணேசன் நடித்து மல்லியம் ராஜகோபால் இயக்கி 1971 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் சவாலே சமாளி. இந்த படத்திற்கு நடன உதவி இயக்குனராக கமல்ஹாசன் பணியாற்றியுள்ளார்.

இது ஒரு சிலருக்கு மட்டுமே தெரிந்தது என்றாலும் இந்தப் படத்தில் துணை நடன இயக்குனராக கமல் இணைந்ததை தற்போது அவருடைய ரசிகர்கள் ஆச்சரியத்துடன் கேட்டு தெரிந்து கொள்கின்றனர். இந்தப் படத்தில் சிவாஜிக்கு ஜோடியாக ஜெயலலிதா நடித்திருப்பார்.

சங்கே முழங்கு: 1972 ஆம் ஆண்டில் பி நீலகண்டன் இயக்கி எம்ஜிஆர் நடித்திருந்து சூப்பர் ஹிட் அடித்த இந்தப் படத்திற்கும் உலகநாயகன் கமலஹாசன் துணை நடன இயக்குனராக பணிபுரிந்து இருக்கிறார். இந்தப் படத்தில் எம்ஜிஆருக்கு ஜோடியாக லஷ்மி மற்றும் விஎஸ் ராகவன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

நான் ஏன் பிறந்தேன்: 1972-ல்  எம்ஜிஆர் நடிப்பில் வெளியான இந்தப்படத்திலும் உலகநாயகன் கமலஹாசன், தங்கப்பன் மாஸ்டரின் உதவி நடன இயக்குனராக பணிபுரிந்தார். இந்தப்படத்தில் எம்ஜிஆருடன் கேஆர் விஜயா இணைந்து நடித்திருப்பார்.

மேலும்கமலஹாசனின் நடிப்பில் 70, 80 களில் வெளியான படங்களில் இடம்பெறும் துள்ளலான பாடல்களில் அவருக்கென்று இருக்கும் தனி ஸ்டைலில் நடனமாடி இளவட்டத்தினரை கவர்ந்திருப்பார்.

ஆனால் அதற்கு முன்பே அவர் எம்ஜிஆர், சிவாஜி படங்களில் துணை நடன இயக்குனராக பணியாற்றியது அறிந்ததும் ‘தலைவர் அப்பவே மாஸ் காட்டியிருக்கிறார்’ என அவருடைய ரசிகர்கள் கெத்து காட்டுகின்றனர்.

Next Story

- Advertisement -