உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களுக்கு சமீபத்தில் செவாலியே விருது கிடைத்ததால் கிட்டத்தட்ட இந்தியாவின் பிரபலங்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர். தமிழக முதல்வரும் இந்திய பிரதமரையும் தவிர. குறிப்பாக கேரள மாநில முதல்வர் பினராய் விஜயன் கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்து கடிதம் ஒன்றையே எழுதியிருந்தார்.

இந்நிலையில் கமல்ஹாசன் கேரள முதல்வருக்கு தற்போது நன்றி கடிதம் எழுதியுள்ளார். ‘உங்களுடைய அன்பான வாழ்த்து கடிதத்திற்கு எனது நன்றிகள். ஒருசிலர் என்னிடம் வேறு மாநில முதல்வரின் அன்பான வாழ்த்தை மெச்சி என்னிடம் கூறினர். ஆனால் நான் உங்களை வேறு மாநில முதல்வராக பார்க்க வில்லை. நீங்கள் எனது மாநில முதல்வர். எந்த மலையாளியிடம் கேட்டாலும் இதை ஒப்புக்கொள்வார்கள் என்று எழுதியுள்ளார்.

கடந்த 1970கள் மற்றும் 80களில் கமல்ஹாசன் அதிக மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பதும் அவருக்கு கிடைத்த முதல் பிலிம்பேர் விருது மலையாள படத்திற்காக கிடைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.