fbpx
Connect with us

Cinemapettai

175 நாட்கள் ஓடிய கமலஹாசன் படத்தின் ரீமேக்கில் நடிக்க போகும் சிம்பு.. ரெண்டு பேருமே அந்த விஷயத்துல கொஞ்சம் மோசம் ஆச்சே!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

175 நாட்கள் ஓடிய கமலஹாசன் படத்தின் ரீமேக்கில் நடிக்க போகும் சிம்பு.. ரெண்டு பேருமே அந்த விஷயத்துல கொஞ்சம் மோசம் ஆச்சே!

தமிழ் சினிமாவைப் பொருத்தவரை ஒரு வகையான திரைப்பட கதை வெற்றி பெற்றால், உடனே அதேபோல் கதைக்களத்தில் படங்கள் அடுத்தடுத்து வெளிவருவது தற்போது டிரண்டாகி விட்டது.

அதாவது ஒரு பேய் படம் வெற்றி பெற்றால் பின்னாடி அடுத்தடுத்து பேய் படங்களாக வெளிவரும். அந்தவகையில் சைக்காலஜிக்கல் மற்றும் த்ரில்லர் கலந்த படங்களுக்கு எப்போதுமே வரவேற்பு உண்டு.

பாரதிராஜா இயக்கத்தில் கமலஹாசன், ஸ்ரீதேவி நடிப்பில் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த படம் சிகப்பு ரோஜாக்கள். இந்த படம் கிட்டத்தட்ட 175 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது.

இரண்டு பிலிம்பேர் விருதுகளை பெற்றது அதாவது சிறந்த நடிகர் மற்றும் சிறந்த இயக்குனருக்கான விருதை தட்டிச்சென்றது. இந்த படத்தின் வெற்றியை வைத்து இந்தியில் ரெட் ரோஸ் என்று ரீமேக் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்த படத்தின் தமிழ் ரீமேக் எடுக்க உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இதில் கமலஹாசன் கதாபாத்திரத்தில் சிம்புவும், ஸ்ரீதேவி வேடத்தில் முன்னணி நடிகைகளை நடிக்க வைக்கலாம் என்ற பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறதாம்.

இந்த படத்தை பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று தெரிவித்துள்ளனர். எது எப்படியோ இந்த படத்திற்கு பொருத்தமான கதாபாத்திரம் சிம்பு மட்டும் தான். ஆனால் சூழ்நிலை எப்படி மாறும் என்று கூறமுடியாது.

Continue Reading
To Top