சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

80, 90-களில் வசூலில் ரஜினிக்கு சிம்மசொப்பனமாக இருந்த கமலின் 5 படங்கள்.. காலத்தால் அழியாத நாயகன்

உலகநாயகன் கமலஹாசன் படங்கள் என்றாலே கலைத்துவமாக இருக்கும் ஆனால் கலெக்சன் இருக்காது. நிறைய திரைப்படங்கள் சினிமாவிற்கு எடுத்துக்காட்டாக அமையும். ஆனால் வசூல் ரீதியாக வெற்றிகள் குறை, பல வருடங்கள் கழித்து யாரும் எதிர்பார்க்காத வெற்றி லோகேஷ் இயக்கத்தில் வெளிவந்த விக்ரம் படத்திற்கு கிடைத்தது. இதுவரை கமல்ஹாசன் திரைப்படங்களில் அதிக வசூலை பெற்ற திரைப்படம் விக்ரம், 80, 90-களில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு சிம்ம சொப்பனமாக இருந்த கமலின் 5 படங்களை தற்போது பார்க்கலாம்.

சகலகலா வல்லவன்: இந்த திரைப்படம் 1982இல் வெளியானது, கதைக்களத்துடன் கூடிய திரைப்படம் எடுத்த கமலஹாசனுக்கு கமர்சியல் ரீதியாக வெற்றிபெற்ற மிக முக்கியமான திரைப்படம். இனிமேல் கமலஹாசன் கமர்சியல் திரைப்படங்கள் நடித்தால் வெற்றி பெறும் என்பதற்கு எடுத்துக்காட்டாக அமைந்த திரைப்படம். இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இந்த காலகட்டத்தில் வசூல் ரீதியாக சாதனை படைத்து பிளாக்பஸ்டர் ஹிட்டாக அமைந்தது.

சலங்கை ஒலி: கமலஹாசன் நடித்த இந்த திரைப்படம் 1983இல் வெளியானது. இது தெலுங்கில் ரீமேக்கில் உருவான தமிழ் திரைப்படம் அல்ல இது டப்பிங் செய்த வெளிவந்த படம். இளையராஜா இசையில் வெளிவந்த இந்த படம் கமலஹாசனுக்கு நடிப்பும், நடனமும் இரண்டிலும் வெற்றி பெற்ற படமாக அமைந்தது. கமல் திரைப்படங்களில் அதிக வசூல் பெற்ற திரைப்படமாக இது கருதப்படுகிறது.

காக்கி சட்டை: 1982இல் வெளியான இந்த திரைப்படம் தமிழ் சினிமாவில் போலீஸ் திரைப்படம் என்றாலே வசனம் பேசுவது, ரவுடிகளை அடிப்பது, நேர்மையான அதிகாரியாக நடிப்பது இப்படித்தான் பெரும்பாலும் அமையும். ஆனால் இந்த திரைப்படம் ரவுடியாக நடித்து கடைசியில் போலீசாக மாறுவார் கமலஹாசன். அப்போதே இது மாதரி கதையை முதலில் கொண்டு வந்த திரைப்படம் காக்கிச்சட்டை. அன்றைய காலகட்டத்தில் மிகப்பெரிய வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. இந்த திரைப்படத்தை பின்பற்றி பல தமிழ் திரைப்படங்கள் இன்றளவும் வந்து கொண்டிருக்கிறது.

நாயகன்: 1987 இல் வெளியான இந்த திரைப்படம் அந்த காலகட்டத்தில் அதிக விமர்சனங்களை பெறவில்லை என்றாலும் இப்பொழுதும் இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்த திரைப்படம் வெளியாகும்போது ரஜினியின் மனிதன் திரைப்படம் வெளியானது. அதனால் வசூல் ரீதியாக சற்று குறைந்து காணப்பட்டாலும் கமல் திரைப்படங்களில் மிகப்பெரிய வசூலை பெற்றது.

அபூர்வ சகோதரர்கள்: 1989இல் வெளியான இந்த திரைப்படம் யாரும் செய்ய முடியாத உயரம் குறைத்த மனிதன் போல கஷ்டப்பட்டு நடித்திருப்பார் கமலஹாசன். டெக்னாலஜி இல்லாத அந்த காலகட்டத்தில் எப்படி கமலஹாசன் நடித்தார் என்று இன்றும் ஆச்சரியப்படும் படமாக பார்க்கப்படுகிறது. கமர்சியல் ரீதியாக கமல்ஹாசனுக்கு பெரிய வசூலைத் தந்த திரைப்படம்.

கமலஹாசன் 200 திரைப்படங்களுக்கு மேல் நடித்திருந்தாலும் பல சாதனைகளை செய்திருந்தாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்ற திரைப்படங்கள் குறைவு. இனிமேல் விக்ரம் திரைப்படம் மூலம் அடுத்தடுத்த வரும் திரைப்படங்கள் வசூல் ரீதியாக வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் கமலஹாசன் இருக்கிறார். சமீபத்தில் கமலஹாசன் வசூல் ரீதியாக வெற்றி பெற்ற படங்களின் வரிசையை அடுத்த பகுதியில் பார்க்கலாம்.

- Advertisement -

Trending News