fbpx
Connect with us

“உனக்கு என்ன தகுதி இருக்கு? கமல் கொடுக்கும் அதிரடி பதில்”

“உனக்கு என்ன தகுதி இருக்கு? கமல் கொடுக்கும் அதிரடி பதில்”

kamal-haasanஉலக நாயகன் கமல்ஹாசன், ஒரு திறமையான நடிகர் மட்டுமின்றி சமூக அக்கறையுள்ள ஒரு நபர் என்பதை அவர் அவ்வப்போது நிரூபித்து வந்துள்ளார். இந்நிலையில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது குறித்த கேள்வி ஒன்றுக்கு அவர் சாட்டையடி பதில் ஒன்றை அளித்துள்ளார்.

வாக்காளர்களுக்கு தேர்தலின்போது எந்த கட்சி பணம் கொடுக்கின்றார்கள் என்பதில் எனக்கு அக்கறை இல்லை. ஆனால் அந்த பணத்தை நீ ஏன் வாங்குகிறாய்? என்று அவர் கேள்வி கேட்டுள்ளார்.

ஒரு அரசியல்வாதியிடம் இருந்து கை நீட்டி காசு வாங்கிவிட்டால், பின்னர் அதே அரசியல்வாதி லஞ்சம் வாங்குகிறார், ஊழல் செய்கிறார் என்று சொல்வதற்கு உனக்கு என்ன தகுதி இருக்கு? என்று கேட்டுள்ள கமல், பணம் வாங்காதீர்கள், அப்போதுதான் அரசியல்வாதி தவறு செய்யும்போது தட்டிக்கேட்க உங்களுக்கு உரிமையுள்ளது என்று அவர் தெளிவாக கூறியுள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in

Advertisement

Trending

To Top