பிறப்பு முதல் இறப்பு வரை ஊழல்.. இந்தியன் தாத்தா போல் லஞ்ச பட்டியலை அம்பலப்படுத்திய கமலஹாசன்!

சினிமாவில் சேவையாற்றிய நடிகர்கள் பலரும் தற்போது அரசியலில் சேவையாற்ற முடிவு செய்துள்ளனர். பல வருடமாக தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருந்த கமல்ஹாசன் தற்போது அரசியல் களத்தில் குதித்துள்ளார்.

தொடர்ந்து மக்கள் நீதி மய்யம் கொள்கைகளையும், திட்டங்களையும் அவ்வப்போது மக்கள் முன்பு சந்தித்து அதனை தெரிவித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் இதுவரை முன்பு நடந்த ஆட்சிகளை பற்றியும் எடுத்துக்கூறி மக்களிடம் மாற்றத்தை கொண்டு வாருங்கள் எனவும் கூறி வருகிறார்.

அடுக்கடுக்காக பல திட்டங்களை கூறிவரும் கமல்ஹாசன். தற்போது தமிழ்நாட்டில் நடக்கும் ஊழல்களை திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அவரது அதிகாரப்பூர்வ பக்கத்தில் வெளியிட்டுள்ள ஊழல் பட்டியல் பற்றி இதோ.

அந்த ஊழல் பட்டியலில் பிறப்பு முதல் இறப்பு வரைக்கும் நடக்கும் ஊழல்களை தெள்ளத்தெளிவாக மக்களுக்கு வெளிச்சத்திற்கு காட்டியுள்ளார். இதனை ஒரு அதிகாரியிடம் கொடுப்பதைவிட மக்களிடம் கொடுப்பதே சரி. மேலும் மக்கள் நீதி மையம் பேப்பர் இன்றி செயல்படுவதே எங்களுடைய திட்டம் என்றும் கூறியுள்ளார். இதன் மூலம் டிஜிட்டல் பரிவர்த்தனை நடத்தப்படும் என தெரிகிறது.

indian-2-story-leaked
indian-2-story-leaked

அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தால் ரூபாய் 300, ஆண் குழந்தை பிறந்தால் ரூபாய் 500 போன்ற லஞ்ச்ங்கள் வாங்குவதாகவும்.

குடும்ப அட்டைக்கு 1000 ரூபாய் லஞ்சமும். இடம் பதிவுக்கு 10 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை லஞ்சம்  வாங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இறப்பிற்கு கூட 500 ரூபாய் லஞ்சம் வாங்குவதாக அதில் தெரிவித்துள்ளார். இதோ அவர் வெளியிட்டுள்ள ஊழல் பட்டியல்,

kamal haasan
kamal haasan