பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் ஓணம் ஸ்பெஷலாக கடந்த வாரம் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றிருக்கும் மலையாள படம் ஒப்பம். மர்டர் மிஸ்ட்ரி ஜானரில் உருவாகியுள்ள இப்படத்தில் மோகன்லால், பார்வையற்றவராக அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

அதிகம் படித்தவை:  உலகநாயகனுக்கு நோர்வே விருது விழாவில் மிகப்பெரும் கௌரவம்

அண்மையில் இப்படத்தின் சிறப்பு காட்சியை சென்னையில் பார்த்த உலகநாயகன் கமல் ஹாசன், படக்குழுவினரை வெகுவாக பாராட்டியுள்ளார். மேலும் இதன் தமிழ் ரீமேக் உரிமையையும் அவர் கைப்பற்றியுள்ளார்.

அதிகம் படித்தவை:  பாகுபலி2 பற்றி வாயே திறக்காத கமல்! என்னவா இருக்கும் ?

ஒருவேளை இப்படத்தில் அவர் ஹீரோவாக நடிக்கும் பட்சத்தில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் பார்வையற்றவராக நடிக்கவுள்ளார். கடைசியாக அவர் 1981-ம் ஆண்டு ராஜபார்வையில் பார்வையற்றவராக நடித்தது குறிப்பிடத்தக்கது.