Tamil Cinema News | சினிமா செய்திகள்
கவுதம் மேனன் வலையில் விழுந்த கமல்.. மிகபெரிய வெற்றி பெற்ற படத்தின் இரண்டாம் பாகம்
கௌதம் மேனன் இயக்கத்தில் கமலஹாசன், ஜோதிகா நடிப்பில் வெளிவந்த மிரட்டலான வேட்டையாடு விளையாடு படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக கமலஹாசன் வாழ்ந்திருப்பார் என்றே கூறலாம். இன்றளவும் ரசிகர்களால் பேசப்பட்டு வரும் கதாபாத்திரம் ராகவன், ரோபோ சங்கர் இந்த கதாபாத்திரத்தை வைத்து சில காட்சிகளில் கூட நடித்து இருப்பார்.
தற்போது இந்தியன்-2 படப்பிடிப்பு கமல் மற்றும் லைகாவிற்கு இடையே ஏற்பட்டுள்ள விரிசல் காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் கொரோன வைரஸின் தாக்கம் இருப்பதால் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மிகவும் எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்த இந்தியன்-2 தற்போது நிறுத்தப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நேரத்தில் ரசிகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி என்னவென்றால் கௌதம் மேனன் மற்றும் கமல் இணையும் வேட்டையாடு விளையாடு படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்த படத்திற்கான கதை தயார் செய்து விட்டதாகவும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றிருப்பதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்க உள்ளதாகவும் சில தினங்களுக்கு முன்பு வெளிவந்த புகைப்படம் உறுதி செய்துள்ளது. அதாவது ஜிப்ஸி படக்குழுவை சந்தித்த கமலஹாசன் வாழ்த்துக்களை தெரிவித்த போது கௌதம் மேனன் மற்றும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் இருவரும் புகைப்படத்தில் இருப்பார்கள்.
இதனால் இதற்கான முதல்கட்ட ஆலோசனைகள் போய்க் கொண்டிருப்பதாகவும் கண்டிப்பாக இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

gypsy-kamal
கௌதம் மேனனுக்கு துருவ நட்சத்திரம், ஜோசப் இமைபோல் காக்க போன்ற படங்கள் வெளிவர காத்துக் கொண்டிருக்கின்றது. இவர் இயக்கம் மட்டும் இல்லாமல் நடிப்பிலும் கவனம் செலுத்தி வருவதால் சில தினங்களுக்கு முன்பு வெளிவந்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் பிரதாப் என்ற கதாபாத்திரம் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் நடிப்பில் வால்டர், நரகாசுரன் போன்ற படங்களும் வெளிவர காத்துக் கொண்டிருக்கின்றது.
இந்தியன்-2 படப்பிடிப்பு முடிந்தபின் முழு அரசியலில் ஈடுபட உள்ளதாக கூறியிருந்த கமலஹாசன் தற்போது வேட்டையாடு விளையாடு இரண்டாம் பாகத்திற்கு ஒப்புக் கொள்வார் என்று ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். இதற்கிடையில் கமலஹாசன் தயாரிக்க உள்ள படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
