எம்ஜிஆர் படத்தில் நடிக்க மறுத்த கமல்ஹாசன்.. இன்று வரை மனதில் இருக்கும் பாரம்

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நடிப்பில் எண்ணற்ற படங்களை நாம் கண்டு ரசித்திருப்போம். அந்த வரிசையில் அவரின் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் நாளை நமதே. இப்படம் அவருக்கு பாராட்டையும், நல்ல பெயரையும் வாங்கி தந்தது.

எம்ஜிஆர் இரட்டை வேடங்களில் நடித்திருந்த இந்த திரைப்படத்தில் அவருடன் இணைந்து லதா, சந்திரமோகன், வெண்ணிற ஆடை நிர்மலா, எம்என் நம்பியார், நாகேஷ் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இப்படி ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து இருந்த இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

அதிலும் இப்படத்தில் இடம்பெற்ற நாளை நமதே என்ற பாடல் அந்தக் காலகட்டத்தில் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானது. இந்தப் படத்தில் கிட்டத்தட்ட ஐந்து இடங்களில் இந்தப் பாடல் அவ்வப்போது உணர்ச்சி பூர்வமாக வரும். இந்த பாடலுக்காகவே இத்திரைப்படத்தை திரும்பத் திரும்ப பார்த்த ரசிகர்களும் உண்டு.

அந்த அளவுக்கு இந்த பாடல் ரசிகர்களின் மனதில் ஒரு தனி இடத்தை பிடித்தது. இவ்வளவு புகழ் பெற்ற இந்த திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்தது கமல்ஹாசன்தான். அவரைத்தான் படக்குழு முதலில் அணுகி நடிக்குமாறு கேட்டார்கள். அந்த சமயத்தில் கமல் தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று பல மொழிகளிலும் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தார்.

அதுமட்டுமல்லாமல் அப்போது அவர் வெளிநாட்டு படப்பிடிப்பில் இருந்துள்ளார். இதனால் அவரால் இந்த பட வாய்ப்பை ஏற்க முடியாமல் போனது. அதன் பிறகுதான் எம்ஜிஆரை இந்த படத்தில் நடிக்க வைத்தனர். படமும் வெளியாகி சக்கைபோடு போட்டது.

அதன் பின்னர் கமல் ஒரு நடிகராக வளர்ந்து கொண்டிருந்த அந்த காலகட்டத்தில் கிடைத்த இப்படி ஒரு அரிய வாய்ப்பை தவற விட்டு விட்டதாக பலமுறை மேடைகளில் சொல்லி வருத்தப்பட்டிருக்கிறார். இன்றுவரை கமலுக்கு அந்த பாரம் மனதில் இருந்துகொண்டே தான் இருக்கிறதாம்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்